Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்த 5 ஐபிஎல் அணிகளும் ஹர்திக் பாண்டியாவை வாங்க துடிக்கிறார்கள்.. ஆனால் கேப்டன்சி..” - அஸ்வின்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே வர்த்தக முறையில் வேறு அணிக்கு மாற்றம் செய்யப்படுவார் என பேசப்பட்டு வரும் நிலையில், அதுபற்றி பல ரகசிய தகவல்களை அஸ்வின் பகிர்ந்துள்ளார். மும்பை அணியிலிருந்து அவர் வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர் செல்வதற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் மிகச் சரியான தேர்வு என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள அஸ்வின், "ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் கேப்டன் பதவி கிடைக்கக்கூடிய ஒரே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மட்டும்தான். ஹர்திக்கை வாங்குவதற்கு கொல்கத்தா அணி ஹர்ஷித் ராணா அல்லது ரிங்கு சிங்கை மும்பை அணிக்கு வர்த்தக முறையில் கொடுக்கலாம். வருண் சக்கரவர்த்தியைக் கொடுக்கும் வாய்ப்பு இருந்தாலும், அபிஷேக் நாயர் இருக்கும் வரை வருண் அங்கிருந்து மாற மாட்டார்" என்று கூறியுள்ளார்.

Hardik Pandya targeted by IPL teams for trade but captaincy became an issue shares Ravichandran Ashwin

அத்துடன் குஜராத் டைட்டன்ஸ் அணி குறித்த அதிரடியான கணிப்பு ஒன்றையும் அஸ்வின் முன்வைத்துள்ளார். "மும்பை அணியுடன் பேசி ரஷித் கானைக் கொடுத்துவிட்டு ஹர்திக்கை மீண்டும் வாங்குவதற்கு குஜராத் அணி கூட முயற்சிக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளதால் அவர்களுக்கு இது பலனளிக்கும். அதேபோல் மும்பைக்கு ஒரு இந்திய விக்கெட் கீப்பரும் உடனடியாகத் தேவைப்படுகிறார்" என்று அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

“இந்திய டி20 அணி ஒழுங்கா ஆடினால் தான் ODI, டெஸ்ட் அணிகளுக்கு..” கம்பீர் பேசியதை பகிர்ந்த திலக் வர்மா

“இந்திய டி20 அணி ஒழுங்கா ஆடினால் தான் ODI, டெஸ்ட் அணிகளுக்கு..” கம்பீர் பேசியதை பகிர்ந்த திலக் வர்மா

ஹர்திக் பாண்டியாவை ஒப்பந்தம் செய்ய 6 அணிகள் மோதுவதாக தகவல் வெளியான நிலையில், லக்னோ அணி இந்த போட்டியில் இல்லை என்று அஸ்வின் தெரிவித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் மட்டுமே அவரை வாங்கும் முனைப்பில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், புதிய அணிக்குச் செல்லும்போது கேப்டன் பதவி வேண்டும் என்ற பிடிவாதத்தை ஹர்திக் பாண்டியா தற்போது தளர்த்திக் கொண்டதாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகி, தனக்கு ஏற்ற ஒரு நல்ல அணியில் ஆடவே அவர் விரும்புவதாகவும் அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Thursday, October 29, 2026, 11:22 [IST]
Other articles published on Oct 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+