Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்திய டி20 அணி ஒழுங்கா ஆடினால் தான் ODI, டெஸ்ட் அணிகளுக்கு..” கம்பீர் பேசியதை பகிர்ந்த திலக் வர்மா

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை, இந்திய அணி ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டாலும், எஞ்சிய போட்டிகளில் வேகம் குறையாது என துணை கேப்டன் திலக் வர்மா தெரிவித்துள்ளார். இந்திய டி20 அணி தான் ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணிக்கு உத்வேகம் கொடுக்க வேண்டும் என பயிற்சியாளர் கம்பீர் வித்தியாசமாக சொன்ன ஒரு கருத்தையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

ஆக்லாந்தில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான 4-வது டி20 போட்டி நடப்பதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திலக் வர்மா, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கொடுத்த ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டார். "இது ஒரு நீண்ட சுற்றுப்பயணம். டி20 போட்டிகளில் நாம் காட்டும் ஆதிக்கமும் அமைக்கும் வெற்றியின் வேகமும்தான், அடுத்து வரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான உத்வேகத்தைத் தரும் என கம்பீர் எங்களுக்குக் கூறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது அலைச்சல், சோர்வு போன்ற சாக்குப்போக்குகளைக் கூறவே முடியாது. எங்களைப் பார்த்து வளரும் இளம் வீரர்களுக்கு நாம்தான் சரியான முன்னுதாரணமாக இருக்க வேண்டும்" என்றார்.

India Vice-Captain Tilak Varma Sets Sights on 5-0 Sweep Against New Zealand Ahead of 4th T20I

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் உடனான கள உறவு குறித்துப் பேசிய துணை கேப்டன் திலக் வர்மா, "ஒரு கேப்டனால் களத்தில் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் தனி ஆளாக கவனிக்க முடியாது. அதனால் நானும் ஸ்ரேயாஸ் ஐயரும் மைதானத்தில் மிகத் தெளிவாகப் பேசிக் கொள்கிறோம். அவருக்குத் தேவையான உதவிகளையும் சரியான ஆலோசனைகளையும் உடனுக்குடன் வழங்கி வருகிறேன். எங்கள் கூட்டணி அணிக்குச் சிறந்த முடிவுகளைத் தருகிறது" எனக் குறிப்பிட்டார்.

"மிரட்டல் விடுத்த விமான ஊழியர்கள்".. குடும்பத்துடன் தவித்ததாக கிரிக்கெட் ஜாம்பவான் சங்கக்காரா புகார்

தனது பேட்டிங் வரிசை மாற்றம் குறித்தும் அவர் விளக்கமளித்தார். ஆரம்பத்தில் 3-வது வரிசையில் களமிறங்கி வந்த இவர், தற்போது 5 அல்லது 6-வது இடங்களில் ஃபினிஷர் என்ற இடத்தில் விளையாடி வருகிறார். "அதிரடியாக சிக்சர் அடிக்கும் திறன் என்னிடம் எப்போதும் உண்டு. ஆனால் இப்போது 5 அல்லது 6-வது வரிசையில் ஆடும்போது, முதல் பந்திலேயே அடித்து ஆட முனையாமல் விவேகமாக செயல்படுகிறேன். தொடக்கத்தில் 1, 2 ரன்கள் எடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்து, போட்டியை கடைசி வரை கொண்டு செல்வதிலேயே கவனம் செலுத்துகிறேன்" என்று திலக் வர்மா கூறினார்.

Story first published: Thursday, October 29, 2026, 11:13 [IST]
Other articles published on Oct 29, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+