Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆர்சிபி அணியில் ஹர்திக் பாண்டியா? ஐபிஎல் முடிந்த மறுநாளே தினேஷ் கார்த்திக்குடன் ரகசிய சந்திப்பு!

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்திக் பாண்டியா அடுத்த சீசனில் ஆர்சிபி அணிக்கு மாறப்போவதாக ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

அகமதாபாத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஜூன் 1 அன்று ஹர்திக் பாண்டியாவும் தினேஷ் கார்த்திக்கும் சந்தித்துப் பேசியுள்ளனர். தினேஷ் கார்த்திக் தற்போது ஆர்சிபி அணியின் வழிகாட்டியாகவும், பேட்டிங் பயிற்சியாளராகவும் உள்ளார். இதனால், இந்த சந்திப்பு ஹர்திக் பாண்டியாவின் ஆர்சிபி அணி மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.

Hardik Pandya to Join RCB Meeting With Dinesh Karthik Sparks Transfer Buzz After IPL 2026

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்குப் பிறகு தொடர்ந்து 2 முறை கோப்பை வென்ற 3-வது அணி என்ற பெருமையை ஆர்சிபி பெற்றது. மறுபுறம், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் அளித்தது.

மும்பை அணியில் அதிருப்தி

ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக 2024 இல் மும்பை அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற ஹர்திக் பாண்டியாவுக்கு, அணியின் மூத்த வீரர்களுடன் சரியான இணக்கம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் நடப்பு சீசனின் பாதியிலேயே மும்பை அணியை விட்டு விலக முடிவு செய்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிடிஐ செய்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஒரு வீரரால் எவ்வளவுதான் தாங்க முடியும்? கடந்த 3 ஆண்டுகள் அவருக்கு எளிதாக இருக்கவில்லை. 2021 இல் அவர் வெளியேறிய மும்பை அணியின் சூழல், 2024 இல் அவர் மீண்டும் வந்தபோது முற்றிலும் மாறியிருந்தது. மூத்த வீரர்கள் அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் இல்லை. இதனால் அவர் மனதளவில் சோர்வடைந்து, அடுத்த சீசனில் மும்பை அணியில் இருக்கப் போவதில்லை என முடிவெடுத்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

IND vs AFG டெஸ்ட், ஒருநாள் தொடரின் முழு போட்டி அட்டவணை, வீரர்கள் பட்டியல் மற்றும் நேரடி ஒளிபரப்பு

IND vs AFG டெஸ்ட், ஒருநாள் தொடரின் முழு போட்டி அட்டவணை, வீரர்கள் பட்டியல் மற்றும் நேரடி ஒளிபரப்பு

ஆர்சிபி அணிக்கு சாதகம்

ஆர்சிபி அணியில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருணால் பாண்டியா விளையாடி வருகிறார். தற்போது சிறந்த ஆல்-ரவுண்டராகத் திகழும் ஹர்திக் பாண்டியா ஆர்சிபி அணிக்குச் சென்றால், அது அந்த அணிக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, கடந்த சீசனில் ஏற்பட்ட மோசமான தோல்விகளிலிருந்தும், வீரர்கள் பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு வர புதிய கேப்டனைத் தேடும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, June 4, 2026, 14:17 [IST]
Other articles published on Jun 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+