Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு 4 ரன்கள் போச்சு.. ஹர்திக் பாண்டியாவின் சின்ன தவறு.. தாக்கத்தை ஏற்படுத்துமா?

அடிலெய்ட் : டி20 உலககோப்பையில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா செய்த தவறால் 4 ரன்கள் கிடைக்காமல் போய்விட்டது.

அரையிறுதி போன்ற ஆட்டத்தில், அதுவும் இங்கிலாந்துக்கு எதிராக என்றால் ஒரு ரன்கள் என்றால் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பதால், கடைசியில் அந்த ஒரு ரன் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்தியாவுக்கு இங்கு 4 ரன்கள் போய்விட்டது.

அரைசதம்

அரைசதம்

முதலில் பேட் செய்த இந்திய அணியில் ராகுல் 5 ரன்களிலும், ரோகித் 27 ரன்களிலும் ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 14 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி தடுமாற, விராட் கோலியும், ஹர்திக் பாண்டியாவும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர்.

4 ரன்கள்

4 ரன்கள்

குறிப்பாக ஹர்திக் பாண்டியா கடைசி 3 ஓவர்களில் சிக்சர், பவுண்டரி என விரட்டினார். இதனால் 140 கூட இந்திய அணி எட்டாது என எதிர்பார்த்த நிலையில், ஹர்திக்கின் அதிரடியால் இந்தியா 168 ரன்கள் கிடைத்தது. ஆனால், நியாயமாக இந்தியாவுக்கு 172 ரன்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆடுகளம் தொய்வாக இருந்தால், பேட்ஸ்மேன் Back foot இல் நின்று ஷாட் அடிக்க வேண்டும்.

ஹர்திக் தவறு

ஹர்திக் தவறு

அப்படி தான்,ஹர்திக் பாண்டியா, சாம் கரண் ஓவர்களில் Back foot இல் நின்று சிக்சர்களை விளாசினார். இப்படி தான் ஆட்டத்தின் கடைசி பந்தில் ஸ்டம்ப் அருகில் நின்ற பாண்டியா, அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவருடைய கால் ஸ்டம்பில் பட்டு, பைல்ஸ் கீழே விழுந்தது. இதனால் அவர் அவுட்டானதால், அந்த 4 ரன்கள் கிடைக்காமல் போய்விட்டது.

இங்கிலாந்து யுத்தி

இங்கிலாந்து யுத்தி

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்கள் Back hand slow bowler என்ற உத்தியை பயன்படுத்தி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனை விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டும் தான் எதிர்கொண்டு விளையாடினர். மற்ற வீரர்கள் சொதப்பியது இந்திய அணிக்கு பெரும் சறுக்கலை தந்துள்ளது.

Story first published: Thursday, November 10, 2022, 16:55 [IST]
Other articles published on Nov 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+