Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெயர் கூட தெரியாதா.. ஜெமீமா இல்ல.. ஹர்மன்ப்ரீத் கவுர்.. தொகுப்பாளரை வெளுத்து வாங்கிய இந்திய கேப்டன்!

டாக்கா: வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு பின் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தொலைக்காட்சி தொகுப்பாளர் இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் பெயரை தவறாக ஜெமீமா என்று கூறியதற்கு, அவர் அங்கேயே பதிலடி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்திய மகளிர் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற வென்ற நிலையில், ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் சுல்தானா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்களை சேர்த்தது.

https://twitter.com/shreyab27/status/1681618021671141377

இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமீமா ரோட்ரிக்ஸ் 78 பந்துகளில் 86 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்களும் சேர்த்தனர். இதன்பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஃபர்ஹானா 47 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஜெமீமா ரோட்ரிக்ஸ் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய ஜெமீமா ரோட்ரிக்ஸ் ஆட்டநாயகிக்கான விருதை தட்டிச் சென்றார். அதேபோல் ஜெமீமா ரோட்ரிக்ஸின் ஆட்டம் வங்கதேச ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. இதையடுத்து இந்த வெற்றி குறித்து பேசுவதற்காக இந்திய மகளிர் அணி கேப்டம் ஹர்மன்ப்ரீத் கவுர் மேடைக்கு அழைக்கப்பட்டார். பின்னர் வந்த ஹர்மன், ஆட்டம் பற்றிய அவரின் கருத்தை பேசினார்.

இறுதியாக தொலைக்காட்சி தொகுப்பார் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நன்றி கூறும் போது, நன்றி ஜெமீமா என்று அவரின் பெயரை மாற்றி தவறாக கூறிவிட்டார். இதனால் கோபமடைந்த இந்திய அணி கேப்டன், ஹர்மன்ப்ரீத் கவு என்று தனது பெயரை கூறிவிட்டு நன்றியை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Story first published: Thursday, July 20, 2023, 14:46 [IST]
Other articles published on Jul 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+