Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கால்பந்து வீரரின் விநோத ஆசை... மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட ஆர்சிபி கேப்டன் விராட் கோலி!

லண்டன் : இங்கிலாந்து கால்பந்து வீரரின் வித்தியாசமான ஆசைக்கு ஆர்சிபி கேப்டன் விராட் கோலி மகிழ்ச்சியுடன் தலையசைத்துள்ளார்.

கால்பந்து பிரீமியர் லீக் தொடரில் டோட்டன்ஹாம் அணிக்காக விளையாடிவரும் ஹாரி கேன் அந்த அணிக்காக 7 கோல்களை போட்டுள்ளார்.

அந்த அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 20 புள்ளிகளுடன் தொடரில் முன்னிலையில் உள்ளது.

டோட்டன்ஹாம் அணி வீரர்

டோட்டன்ஹாம் அணி வீரர்

இங்கிலீஷ் கால்பந்து பிரீமியர் லீக் 2020 தொடரின் டோட்டன்ஹாம் அணிக்காக விளையாடி வருகிறார் ஹாரி கேன். இதுவரை 9 போட்டிகளில் அந்த அணி விளையாடி 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், ஹாரி கேன் இதுவரை 7 கோல்களை போட்டு அணியின் வெற்றிக்கு கைகொடுத்து வருகிறார்.

ஹாரியின் அதிரடி

ஹாரியின் அதிரடி

இந்நிலையில், போட்டிகளையொட்டி ஹாரி மற்றும் அணி வீரர்கள் கிரிக்கெட் பயிற்சியை இன்டோரில் செய்தனர். சக வீரர்கள் போட்ட பந்துகளை சரவெடியென ஹாரி அடித்தார். டென்னிஸ் பந்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அனைத்து வீரர்களும் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டனர்.

ஆர்சிபியில் இடம் கிடைக்குமா?

இந்நிலையில் தான் மிகவும் சிறப்பாக பந்துகளை எதிர்கொண்டதாகவும் டி20 போட்டிகளில் விளையாட தான் பொருத்தமாக இருப்பேன் என்றும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஹாரி தெரிவித்தார். மேலும் ஐபிஎல்லின் அடுத்த 2021 சீசனில் தன்னை ஆர்சிபி அணியில் சேர்த்துக் கொள்வாரா என்று கேப்டன் விராட் கோலிக்கும் அவர் குறும்புடன் கேள்வி எழுப்பினார்.

விராட் கோலி பதில்

இதையடுத்து இந்த பதிவிற்கு பதிலளித்த கேப்டன் விராட் கோலி, ஹாரியின் திறமைக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் கண்டிப்பாக அவருக்கு ஆர்சிபியில் சிறப்பான இடம் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக ஹாரியின் இந்த டிவீட்டிற்கு பதிலளித்த ஆர்சிபி அணி, 10ம் நம்பர் ஜெர்சியை அவருக்காக ரிசர்வ் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Story first published: Sunday, November 29, 2020, 11:36 [IST]
Other articles published on Nov 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+