கோஹ்லியை நேற்று பழிக்கு பழி வாங்கிவிட்டேன்.. ஹர்திக் பாண்டியா 'கொக்கரிப்பு'

Posted By:

ராஜ்கோட்: நேற்று ராஜ்கோட்டில் இந்தியா நியூசிலாந்துக்கு இடையில் நடந்த இரண்டாவது டி-20 போட்டிக்கு பின் கோஹ்லிக்கு ஹோட்டல் அறையில் சிறப்பாக பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கோஹ்லி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை இந்திய அணி வீரர்களுடன் கொண்டாடினார்.

பிறந்த நாள் விழாவின் போது எப்போதும் போல் கோஹ்லி உடல் முழுக்க கேக் பூசி இந்தியா வீரர்கள் கலாட்டாவாக பிறந்த நாளை கொண்டாடினர்.

இந்த நிலையில் நேற்று கோஹ்லியை பழிக்கு பழி வாங்கிவிட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டிவிட்டரில் எழுதி இருக்கிறார். மேலும் மற்ற வீரர்களையும் பழிக்கு பழி வாங்குவேன் என்றும் கூறியிருக்கிறார்.

 பிறந்தநாள் விழா

பிறந்தநாள் விழா

இன்று 29 வயதை அடையும் இந்திய கேப்டன் கோஹ்லி சரியாக 12 மணிக்கு தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். நேற்று போட்டியை முடித்துவிட்டு ஹோட்டல் அறைக்கு சென்ற இந்திய வீரர்கள் விராட் கோஹ்லிக்கு கேக் வெட்டி கொண்டாடினார்கள். உலகம் முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது சாதனை குறித்து பக்கம் பக்கமாக எழுதியும் வருகின்றனர்.

 இந்திய அணியில் வழக்கம்

இந்திய அணியில் வழக்கம்

கடந்த சில வருடங்களாக இந்திய வீரர்களின் பிறந்த நாள் விழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சில மாதங்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர் டோணியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அதேபோல் நேற்று முதல் நாள் நெஹ்ராவுக்கு விடையளிக்கும் போதும் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஆனால் சாதாரணமாக கொண்டாடாமல் முகம் முழுக்க கேக் பூசி கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கோஹ்லியும் கேக்கும்

இந்த நிலையில் நேற்று கோஹ்லியின் முகம் , தலை என அனைத்து இடங்களிலும் கேக்கை பூசி ஜாலியாக பிறந்தநாள் கொண்டாடினார்கள். இந்த புகைபபடங்கள் தற்போது வைரல் ஆகி இருக்கிறது. தற்போது கோஹ்லியை தான் பழிக்கு பழி வாங்கி விட்டதாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டு இருக்கிறார். அவர் கோஹ்லி முகத்தில் அதிகமாக கேக் பூசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வச்சு செய்வேன்

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா இன்னொரு வீடியோவும் போட்டு இருக்கிறார். அதில் ''சில நாள் முன்பு எனக்கு செய்ததை இப்போது உங்களுக்கு செய்கிறேன். எல்லா வருடமும் எல்லாருக்கும் பிறந்த நாள் வரும், நான் எல்லோரையும் கேக் பூசி பழிக்கு பழி வாங்குவேன்'' என காமெடியாக எழுதி இருக்கிறார்.

Story first published: Sunday, November 5, 2017, 16:19 [IST]
Other articles published on Nov 5, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற