Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியின் கடைசி ஐபிஎல் சீசனா இது? இப்படிதான் 3 வருஷமா சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!

மும்பை: கடைசி ஐபிஎல் தொடரில் தோனி விளையாடப் போகிறார் என்பதை கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக பலரும் சொல்லி வருவதாக மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தோனி இன்னும் ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவதற்கான உடற்தகுதி கொண்டுள்ளதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் களமிறங்க அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றனர்.

அதற்கான பயிற்சிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து அணி நிர்வாகங்களும், ரசிகர்களை தயார் நிலையில் வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

தோனியின் கடைசி ஐபிஎல் சீசன்?

தோனியின் கடைசி ஐபிஎல் சீசன்?

அந்த வகையில் சென்னை அணி தரப்பில் சிஎஸ்கே வீரர்களை பயிற்சியை காண ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன் என்று சொல்லப்பட்டு வருகிறது. அதேபோல் சில மாதங்களுக்கு முன் தோனி பேசும் போதும், சென்னையில் தான் எனது கிரிக்கெட் போட்டி இருக்கும் என்று கூறி இருந்தார்.

குவியும் ரசிகர்கள்

குவியும் ரசிகர்கள்

இதனால் தோனியை கடைசி முறையாக களத்தில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதற்கேற்ப சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் முதல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்குவதற்கு ரசிகர்கள் இரவு 3 மணி முதலே வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கினர்.

தோனி கொடுத்த பதில்

தோனி கொடுத்த பதில்

ஆனால் தோனி இதுவரை இதுதான் என் கடைசி ஐபிஎல் தொடர் என்பதை அறிவிக்கவில்லை. கொரோனா பரவின் போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரே தோனி கடைசியாக இருக்கும் என்று எண்ணிய பல வெளிநாட்டு வீரர்களும், தோனியிடம் இருந்து அவரது கையெழுத்திட்ட ஜெர்சியை பெற்றுக் கொண்டனர். ஆனால் இதுதான் கடைசி ஐபில் தொடரா என்று ஹர்ஷா போக்ளே எழுப்பிய கேள்விக்கு, Definitely Not என்று பதிலளித்தார்.

தோனி பற்றி ரோகித் சர்மா

தோனி பற்றி ரோகித் சர்மா

தற்போது மீண்டும் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா, தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடர் என்று பேச்சுகளை கடந்த 2 முதல் 3 ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். ஆனால் தோனி இன்னும் சில சீசன்களை ஆடும் அளவிற்கு உடற்தகுதியுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 29, 2023, 14:03 [IST]
Other articles published on Mar 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+