Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அளவுல சிறப்பான வீரர்... அவர் அதிசயங்கள செய்வாரு... கேப்டனே பாராட்டிய இளம்வீரர்!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

Recommended Video

Delhi Capitals அணியில் இடம்பெற்ற இளம் வீரர்.. யார் இந்த Lalit Yadav

இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அணியின் நேற்றைய போட்டியில் ஒரு ட்விஸ்ட்டாக ரிஷப் பந்த்திற்கு பதிலாக லலித் யாதவ் களமிறங்கி விளையாடினார். பௌலங்கிலும் அசத்தினார்.

13வது போட்டி

13வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 13வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணியின் ஸ்கோரை 137க்கு சுருக்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு 19.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை பூர்த்தி செய்தது.

சென்னையில் முதல் வெற்றி

சென்னையில் முதல் வெற்றி

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல்லில் அந்த அணி சென்னையில் இந்த சீசனில் பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும். நேற்றைய போட்டியின்போது பேட்டிங் லைனை ரிஷப் பந்த் மாற்றினார்.

ரிஷப் இடத்தில் யாதவ்

ரிஷப் இடத்தில் யாதவ்

மும்பை அணியின் 138 இலக்கை சேஸிங் செய்யும் விதமாக டெல்லி வீரர்கள் ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் விளையாடி, அவுட்டான நிலையில், 4வது இடத்தில் ரிஷப் பந்த் களமிறங்கி விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இளம்வீரர் லலித் யாதவ் களமிறங்கி, அவுட்டாகாமல் 25 பந்துகளில் 22 ரன்களை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.

பந்த் பாராட்டு

பந்த் பாராட்டு

மேலும் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் லலித் யாதவ் இந்திய அளவில் சிறப்பான வீரர் என்று தான் கருதுவதாகவும் அவரது திறமையை மெருகேற்ற தாங்கள் விரும்புவதாகவும் பந்த் தெரிவித்துள்ளார். அவர் தங்களுக்காக அதிசயங்களை செய்வார் என்றும் பந்த் தெரிவித்துள்ளார்.

இலகுவாக உணர வைத்தார்

இலகுவாக உணர வைத்தார்

மேலும் நேற்றைய ஆட்டத்தில் மிஸ்ராவின் பங்களிப்பு குறித்தும் பந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். போட்டியை துவங்க ஆரம்பித்தபோது நெருக்கடியை உணர்ந்ததாகவும் ஆனால் தங்களை இலகுவாகவும் சிறப்பாகவும் அமித் மிஸ்ரா உணர வைத்ததாகவும் பந்த் மேலும் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, April 21, 2021, 15:48 [IST]
Other articles published on Apr 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+