Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டோட மிகப்பெரிய சொத்து அவரு... அவர்கிட்ட போனாலே மெய்சிலிர்க்குது..லுங்கி நிகிடி நெகிழ்ச்சி

டெல்லி : ஐபிஎல் 2021 சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரையில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் சிஎஸ்கே அணிக்காக எம்எஸ் தோனியின் கேப்டன்ஷிப்பில் விளையாடவுள்ளார் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி.

கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய சீசன்களில் முறையே 11 மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார் லுங்கி நிகிடி. 2019ல் காயம் காரணமாக 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 9ல் துவக்கம்

ஏப்ரல் 9ல் துவக்கம்

ஐபிஎல் 2021 சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரையில் நடைபெறவுள்ளது. கடந்த சீசனில் ப்ளே-ஆப் சுற்றிற்கு கூட முன்னேறாத நிலையில் இந்த தொடரில் வெற்றிக்காக சிஎஸ்கே அணி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தன்னுடைய பலத்தை அதிகரிக்கும்வகையில் புதிய வீரர்களை எடுத்துள்ளது.

சென்னையின் சொத்து

சென்னையின் சொத்து

இந்நிலையில் கிரிக்கெட்டின் மிகப்பெரிய சொத்து சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி என்று அந்த அணிக்காக இந்த சீசனில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க பௌலர் லுங்கி நிகிடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல சென்னையின் மிகப்பெரிய சொத்து தோனி என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

கடந்த 2018 மற்றும் 2019 ஆகிய சீசன்களில் அந்த அணிக்காக விளையாடியுள்ள நிகிடி முறையே 11 மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2019 சீசனில் காயம் காரணமாக 4 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடினார். இந்நிலையில் இந்த சீசனில் அவரின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான எனர்ஜி

சிறப்பான எனர்ஜி

தொடர்ந்து தோனி குறித்த கருத்துக்களை பகிர்ந்த நிகிடி, தோனியின் ஆரா அனைவருக்கும் சிறப்பான எனர்ஜியை கொடுக்கும் என்றும் அவருடன் இணைந்து விளையாடும்போது தன்னுடைய மெய் சிலிர்ப்பதை தன்னால் உணர முடியும் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தோனி குறித்து மகிழ்ச்சி

தோனி குறித்து மகிழ்ச்சி

இயல்பாகவே அதிகமாக பேசாத தோனி, தன்னுடைய அணி வீரர்களுக்கு உதவி தேவைப்படும்போது அதை உணர்ந்து சிறப்பாக செயல்படுவார் என்றும் நிகிடி பாராட்டியுள்ளார். அவரின் நிலையான ஆட்டம் குறித்து தான் எப்போதுமே அதிசயிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவருக்கு கீழ் விளையாடுவது குறித்து தான் மகிழ்ச்சியாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 16, 2021, 10:53 [IST]
Other articles published on Mar 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+