Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் எனக்கு அண்ணா மாதிரி... நெகிழ்ந்த ரஹானே...கேள்வி -பதில் நிகழ்ச்சியில் சிறப்பு!

சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

இதையொட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் சென்னையில் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த துணை கேப்டன் ரஹானே, ரோகித் சர்மாவுடனான தனது உறவு குறித்து பகிர்ந்து கொண்டார்.

குவாரன்டைனில் வீரர்கள்

குவாரன்டைனில் வீரர்கள்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளை கொண்ட தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இரு அணி வீரர்களும் சென்னையில் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர்.

கேள்வி -பதில் நிகழ்ச்சியில் ரஹானே

கேள்வி -பதில் நிகழ்ச்சியில் ரஹானே

குவாரன்டைனில் உள்ள இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைகளிலேயே பிட்னஸ் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இடையிடையே சமூக வலைதளங்களிலும் போஸ்ட் போடுவதற்கு அவர்கள் மறக்கவில்லை. இந்நிலையில் தொடரின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

ரஹானே நெகிழ்ச்சி

ரஹானே நெகிழ்ச்சி

இந்திய குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் துணை கேப்டன் ரோகித் சர்மாவுடனான ரஹானேவின் உறவு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஹானே, ரோகித் சர்மா தனது சகோதரர் போன்றவர் என்றும் அவருடன் தான் சேர்ந்து விளையாடுவது மிகவும் சிறப்பானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான ரோகித் சர்மா

சிறப்பான ரோகித் சர்மா

கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா விளையாடினார். ஆயினும் அந்த இரு போட்டிகளிலும் தனது சிறப்பை வெளிப்படுத்தி கவனம் பெற்றார். அந்த தொடரில் அவர் இடம்பெறுவதற்கு பிட்னஸ் பரிசோதனைகள் என மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக வேண்டியிருந்தது.

Story first published: Sunday, January 31, 2021, 14:58 [IST]
Other articles published on Jan 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+