Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடேங்கப்பா.. ஐபிஎல் மீடியா உரிமைக்கான ரூ.48,000 கோடி.. யார் யாருக்கு எத்தனை பங்குகள்?? - முழு விவரம்

மும்பை: ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தின் மூலம் வந்த பணத்தை பிசிசிஐ எப்படி பிரிக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது.

கடந்த 5 ஆண்டுகளுக்கான் உரிமை தொகை ரூ. 16,347 கோடியாக இருந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ. 48,390 கோடியாக உயர்ந்துள்ளது.

மொத்த வருமானம்

மொத்த வருமானம்

தொலைக்காட்சி, டிஜிட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த ஒளிபரப்பு உரிமைக்கான ஏலத்தில் ஸ்டார் இந்தியா, ரிலையன்ஸ் வியாகாம் 18, டைம்ஸ் இண்டர்நெட் ஆகிய நிறுவனங்கள் வெற்றி பெற்றுள்ளன. தொகை அதிகமானதால், போட்டிகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

அணி நிர்வாகங்களுக்கு பங்கு

அணி நிர்வாகங்களுக்கு பங்கு

இந்நிலையில் இந்த ரூ.48,390 கோடியை பிசிசிஐ எப்படி பங்கு பிரிக்கும் எனத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதாவது இந்த வருமானத்தில் 50% தொகையான ரூ.24,195 கோடியை நீண்ட வருடங்களாக உள்ள 8 ஐபிஎல் அணிகளுக்கு சரி சமமாக பிரித்து தரப்படும். சுமார் ரூ.3000 கோடி வரை ஒவ்வொரு அணியும் பெரும். புதிதாக வந்த குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இந்த பங்கை பெறுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆக வேண்டும்.

மீதமுள்ள தொகை

மீதமுள்ள தொகை

மீதமுள்ள 50% தொகையான ரூ.24,195 கோடியில் 26% சதவீத பணம் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்காக ஒதுக்கப்படும். 4% சதவீத பணத்தை மைதான ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள 70 % சதவீத தொகை மாநில கிரிக்கெட் சங்களுக்கு ஒதுக்கப்படும்.

புது மைதானங்கள்

புது மைதானங்கள்

மாநிலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வருமானத்தில் தான் பெங்களூரு, ஜெய்பூர், கொல்கத்தா என நாட்டின் பல பகுதிகளில் புதிய மைதானங்களை கட்டுவதற்கான திட்டத்தையும் பிசிசிஐ போட்டுள்ளது. இதனை அதன் தலைவர் சவுரவ் கங்குலியே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, June 15, 2022, 19:32 [IST]
Other articles published on Jun 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+