Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வினுக்கு முதல் ரேங்க்.. ஆரோனுக்கு கடைசி ரேங்க்.. பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டு, தனது வீரர்களுக்கான கிரேடுகளை அறிவித்துள்ளது. அதன்படி டோணி, அஸ்வின் போன்றோர் முதல் கிரேடில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களின் திறமைக்கு ஏற்ப கிரேடுகளை வகுத்துள்ளது. அதன்படியான கிரேடுகளை வெளியிட்டுள்ளது. ஏ, பி, சி என மூன்றுவகைகளில் இந்த கிரேடுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

டோணி, அஸ்வின்

டோணி, அஸ்வின்

கிரேட் ஏ பிரிவில் கேப்டன் டோணி, விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், புவனேஸ்வர் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மிக திறமையான வீரர்கள் என்ற கணக்கில் வருகின்றனர்.

முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா

முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா

கிரேட் பி பிரிவில் பிரக்ஜான் ஓஜா, முரளி விஜய், புஜாரா, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, ஷிகர் தவான், உமேஷ் யாதவ், ரோஹித் ஷர்மா, அஜிங்ய ரகானே, அம்பத்தி ராயுடு மற்றும் முகமது ஷமி ஆகியோர் உள்ளனர்.

கடைசி ரேங்க்

கடைசி ரேங்க்

கிரேட் சி எனப்படும் மூன்றாவது நிலை பட்டியலில், அமித் மிஸ்ரா, வருண் ஆரோன், சாஹா, ஸ்டூவர்ட் பின்னி, பங்கஜ் சிங், வினய் குமார், மோஹித் ஷர்மா, தவல் குல்கர்ணி, பர்வேஸ் ரசூல், அக்சர் பட்டேல், மனோஜ் திவாரி, ராபின் உத்தப்பா, கரண் ஷர்மா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், கேஎல் ராகுல். இவர்கள் சி பிரிவில் வருகின்றனர்.

யுவராஜ் சிங், கம்பீர் அவுட்

யுவராஜ் சிங், கம்பீர் அவுட்

இந்த ஒப்பந்தத்தில் யுவராஜ் சிங், கவுதம் கம்பீர் ஆகிய அதிரடி இடது கை பேட்ஸ்மேன்கள் இருவரையுமே நீக்கிவிட்டது கிரிக்கெட் வாரியம். இந்த இருவருமே உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் பெறவில்லை.

புதிய வீரர்களுக்கு கடைசி ரேங்க்

புதிய வீரர்களுக்கு கடைசி ரேங்க்

இந்த பட்டியலில் இடம்பெறாத வீரர்கள் இந்தியாவுக்காக விளையாட வேண்டிவந்தால், அப்போது அந்த வீரர்கள் கிரேட் சி என்ற பட்டியலிலே சேர்க்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 23, 2014, 9:38 [IST]
Other articles published on Dec 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+