Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்ப ரவி சாஸ்திரி தான் ரோஹித் - கோலி சண்டைக்கு காரணமா? 2 நாள் தாமதத்தால் வெளியான ரகசியம்!

Recommended Video

Ravi Shastri : 2 முறை அவரால் தான் தோற்றோம்..மீண்டும் ரவி சாஸ்திரி வேண்டாம்- வீடியோ

மும்பை : ரவி சாஸ்திரி இந்திய அணியுடன் அமெரிக்கா கிளம்பிச் செல்ல மாட்டார். இரு தினங்கள் கழித்தே அவர் அமெரிக்கா செல்வார் என தெரிய வந்துள்ளது.

இந்திய அணியில் நடக்கும் கோஷ்டி சண்டை பெரிதாக வளர்ந்து வருகிறது. கேப்டன் கோலி - துணை கேப்டன் ரோஹித் சர்மா முட்டிக் கொண்டு நிற்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கான சமரச முயற்சிகள் தொடங்கி உள்ளது.

கோலி - ரோஹித் பிரச்சனை

கோலி - ரோஹித் பிரச்சனை

உலகக்கோப்பை தொடருக்கு பின் ரோஹித் சர்மா - கோலி மோதல் குறித்த தகவல்கள் இறக்கை கட்டிப் பறந்தன. பிசிசிஐ இதை மறுத்தாலும்,எல்லாமே ஊடகம் எழுதும் கட்டுக்கதைகள் என கூறினாலும், இருவரிடமும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது.

சமரசம் செய்ய திட்டம்

சமரசம் செய்ய திட்டம்

இந்தியாவில் சமரசம் பேசினால் பிரச்சனை வெளியே தெரிந்து விடும் என்று எண்ணத்தாலோ என்னவோ அமெரிக்காவில் சமரசம் செய்ய உள்ளது பிசிசிஐ. இதற்காக பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி அமெரிக்கா செல்ல உள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.

ரவி சாஸ்திரி வேண்டாம்

ரவி சாஸ்திரி வேண்டாம்

இந்த நிலையில், ரவி சாஸ்திரி இரு தினங்கள் கழித்து தான் இந்திய அணியுடன் இணைய உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. பிசிசிஐ தான் அவரை தாமதமாக வரச் சொல்லி இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

எதற்காக இந்த திடீர் கட்டுப்பாடு? என்ற கேள்வி எழுந்துள்ளது. கோலி - ரோஹித் இடையே சமரசம் செய்ய உள்ள சூழ்நிலையில், அங்கே ரவி சாஸ்திரி இருந்தால் சரியாக வராது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

யாரால் இந்த பிரச்சனை?

யாரால் இந்த பிரச்சனை?

ரவி சாஸ்திரிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை பார்த்தால், பிரச்சனைகளுக்கு அவரும் ஒரு காரணமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சில வீரர்கள் ரவி சாஸ்திரியின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து இருப்பதாக கூறப்படும் நிலையில், நடக்கும் சம்பவங்கள் நிலைமை இன்னும் மோசமாக இருக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Monday, July 29, 2019, 15:47 [IST]
Other articles published on Jul 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+