WTC Final 2021: இந்திய அணியின் 11 "முத்துக்கள்" யார்? - ஃபயரான "பிளேயிங் லெவன்" இதோ
சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய அணியில் தேர்வு செய்யப்பட அதிகம் வாய்ப்புள்ள வீரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
இன்னும் 10 நாட்கள் தான். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி மனரீதியாக அதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
எனினும், நியூசிலாந்து அணி, தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், உள்ளூரில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியிடம் டிரா செய்து தனது பலத்தை நிரூபித்து இருக்கிறது. இந்த நிலையில், நியூஸி.,க்கு எதிரான இந்திய பிளேயிங் லெவன் தேர்வு எப்படி இருக்கப் போகிறது என்பது சஸ்பென்ஸாக உள்ளது.

வீரர்கள் லிஸ்ட்
முதலில் அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்கள் லிஸ்ட்டை பார்க்கலாம். ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், மாயங்க் அகர்வால், புஜாரா, அஜின்க்யா ரஹானே, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல், ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷரதுல் தாகூர், உமேஷ் யாதவ்.

ஐபிஎல்-ல் சொதப்பல்
இதில், தொடக்க பேட்ஸ்மேனில் ஒருவராக ரோஹித் ஷர்மாவுக்கு நிச்சயம் இடமுண்டு. அவருடன் கம்பெனி கொடுத்து களமிறங்கப் போவது யார் என்பதே எதிர்பார்ப்பு. ஷுப்மன் கில் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடினார். சவால் நிறைந்த களத்தில் திறம்பட ஆடினார். ஆனால், ஐபிஎல்-ல் அவரது ஆட்டம் படும் மோசமாகவும், ஸ்லோவாகவும் இருந்தது. ஒருக்கட்டத்தில் அவரை அணியில் இருந்து நீக்கும் அளவுக்கு அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்தது.

6 வீரர்கள் உறுதி
ஆகையால், ஷுப்மனுக்கு பதில் மாயங்க் அகர்வால் அணியில் இடம் பிடிக்கக் கூட வாய்ப்புள்ளது. தொடர்ந்து விராட் கோலி, புஜாரா, ரஹானே ஆகிய மூன்று வீரர்கள் அடங்கிய மிடில் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது. லோ ஆர்டரில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர். ஸோ, ரோஹித், கில் (அ) மாயங்க், கோலி, புஜாரா, ரஹானே ஆகியோர் அணியில் இருப்பது கன்ஃபார்ம்.

அஷ்வின் - ஜடேஜா காம்போ
மீதமுள்ள லோ ஆர்டரில் ஹனுமா விஹாரிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. அவர் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடினாலும், இந்திய அணியில் பவுலிங் ஆல்ரவுண்டர் தேவை என்ற கட்டாயத்தினால், அஷ்வின், ஜடேஜாவுக்கே முன்னுரிமை கொடுக்கப்படலாம். இதில், இருவருமே அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அப்படி இருவரும் இடம் பிடிக்கும் பட்சத்தில் மூன்று ஃபாஸ்ட் பவுலர்களுடன் இந்தியா விளையாட நேரிடும். கேப்டன் விராட் கோலி, நான்கு ஃபாஸ்ட் பவுலர்களுடன் விளையாட ஆர்வம் காட்டுபவர் என்றாலும், இது இறுதிப் போட்டி என்பதால் முடிந்த அளவு பாதுகாப்பான அணியோடு தான் அவர் களமிறங்க நேரிடும். ஸோ, அஷ்வின், ஜடேஜாவுடன் இணைந்து பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோர் இந்திய அணியின் லைன் அப்-ஐ நிறைவு செய்ய வாய்ப்பிருக்கிறது.


Click it and Unblock the Notifications