Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப என்ன சொல்றீங்க.. பேட்டால் பதில் சொன்ன ரோகித், தவான்.. ஆஸி.க்கு எதிராக புதிய சாதனை

Recommended Video

அடிச்சு தூக்கிய ரோஹித் சர்மா - தவான் கூட்டணி!

மொகாலி:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்து இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டி.20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி முழுவதுமாக பறிகொடுத்தது.

இந நிலையில், இரு அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்பொழுது நடைபெற்று வருகிறது. 4வது போட்டியில் மொகாலியில் நடைபெற்றது.

தொடக்க ஜோடி

தொடக்க ஜோடி

டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித், தவான் ஜோடி களமிறங்கியது. பல போட்டிகளில் சொதப்பிய இந்த ஜோடி... மொகாலி ஆட்டத்தின் வழியாக அதற்கு எல்லாம் வலுவான முற்றுப்புள்ளி ஒன்றை வைத்துள்ளது.

ரன்கள் குவிப்பு

ரன்கள் குவிப்பு

தொடக்கம் முதலே... ஆஸி. அணியின் பந்துவீச்சை சிறிது, சிறிதாக துவம்சம் செய்ய தொடங்கினர். தவறான பந்துகளை தேர்ந்தெடுத்த ரோகித், தவான் ஜோடி.. அவற்றை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் மாற்றியது.

பார்முக்கு வந்த ஜோடி

பார்முக்கு வந்த ஜோடி

முதலில் 50 ரன்களை கடந்த இந்த ஜோடி.. மெல்ல, மெல்ல முழுமையான பார்முக்கு வந்தது. இந்த ஜோடியை பிரிக்க ஆஸி. பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயன்றனர்.

பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம்

பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம்

ஆனால்... அவர்கள் வீசிய பந்துகள் விக்கெட்டாக மாறாமல் ரன்களாக மாறியது. பவுண்டரிகளாகவும்,சிக்சர்களாகவும் ரன்கள் வந்து சேர்ந்தன. ஆஸி. பவுலர்களை ஜோடியை வீழ்த்த எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

புதிய சாதனை

புதிய சாதனை

அணியின் ஸ்கோர் 100ஐ கடந்து 150 ஆக உயர்ந்தது. ஸ்கோர் 178 ரன்களை கடந்த போது ரோகித், தவான் ஆஸிக்கு எதிரான போட்டியில் புதிய சாதனையை படைத்தனர்.

அதிகமான ரன்கள்

அதிகமான ரன்கள்

ஆஸிக்கு எதிரான போட்டிகளில் துவக்க விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற புதிய சாதனையை அவர்கள் எட்டினர். 2013ம் ஆண்டுக்கு முன்பு.. இதே ஜோடியானது, நாக்பூரில் 178 ரன்கள் குவித்தது தான் சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

 95 ரன்களில் ரோகித் அவுட்

95 ரன்களில் ரோகித் அவுட்

2013ம் ஆண்டிலும் நாக்பூரில் இதே ஜோடி 176 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பாக குவித்தது. ஸ்கோர் 193 ரன்கள் எட்டிய போது சதம் அடிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டரோகிக் 95 ரன்களில் ஆட்டமிழக்க...இந்த ஜோடி பிரிந்தது. இருப்பினும்.. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த ஜோடி பார்முக்கு வந்திருப்பது உலக கோப்பை தொடருக்கு மிகவும் உத்வேகமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.

Story first published: Sunday, March 10, 2019, 16:49 [IST]
Other articles published on Mar 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+