யாரும் எதிர்பார்க்காத 5 வீரர்கள்... ஏலத்தில் நடந்த சர்ப்ரைஸ்.. ஷாக் கொடுத்த அணிகள்
சென்னை: ஐபிஎல் ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டு அதிர்ச்சி அளித்துள்ளனர்.
ஐபிஎல் ஏலத்தில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது வழக்கம் தான். ஆனால் இந்த முறை அல்டிமேட் ட்விஸ்ட்கள் நடந்துள்ளது. அணிகள் பல கோடிக்கு எடுத்துள்ள வீரர்கள் அதற்கு சரியானவர்கள்தானா என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பாக கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்து அதிர்ச்சியளித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அப்படி நேற்று எடுக்க டாப் 5 வீரர்களின் நிலையை பார்க்கலாம்.

கிறிஸ் மோரிஸ்
ஐபிஎல் வரலாற்றில் யுவராஜ் சிங்குக்கு 16 கோடி கொடுப்பட்டதே, ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச ஏலத் தொகையாகும். ஆனால் அதனை கிறிஸ் மோரிஸ் முறியடித்துள்ளார். 16.25 கோடி கொடுத்து அவரை வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ். அவரின் ஆரம்ப தொகை ரூ.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

எதற்கு
33வயதாகும் கிறிஸ் மோரிஸ் இதுவரை 70 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 551 ரன்கள் எடுத்துள்ளார். ஆவரேஜ் 23.95. ஸ்டிரைக் ரேட் 157.87. பந்துவீச்சில் 80 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார், ஓவருக்கு 7.81 ரன்கள் கொடுத்திருக்கிறார்.

2வது இடம்
நியூசிலாந்து வீரரான கெயில் ஜேமிசனை ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பெங்களூரு அணி. ஆரம்ப தொகையாக ரூ.75 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் கடும் போட்டிக்கு இடையே ஆர்.சி.பி அணியால் வாங்கப்பட்டார்.

3வது இடம்
கடந்த 2 சீசன்களில் சரியாக விளையாடாத மேக்ஸ்வெல்லை ஏலத்தில் எடுக்க சென்னை, பென்களூரு, கொல்கத்தா அணிகள் போட்டி போட்டன. இறுதியில் பெங்களூரு அணி அவரை ரூ.14.25 கோடிக்கு எடுத்து ஷாக் கொடுத்தது. கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்ககாக 13 விளையாடி வெறும் 108 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.

ஆஸ்திரேலிய வீரர்
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஜேய் ரிச்சர்ட்சனை பவுலிங் அட்டாக்கிற்காக கொல்கத்தா அணி ரூ.14 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இவர் கடைசியாக நடந்த பிக் பாஷ் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் ஆவார்.

சி.எஸ்.கே
இதில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தமிழக வீரர் கிருஷ்ணப்பா கௌதம்-ஐ, 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் இன்னும் இந்திய அணிக்கு தேர்வாக வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications