Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்.. படுமோசமான தோல்வியுடன் வெளியேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

புனே: ஐபிஎல் லீக் போட்டியில் புனேவுக்கு எதிரான ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோசமான தோல்வியைச் சந்தித்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக புனேவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட். அதன்படி முதலில் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பவர் பிளேயில் 32 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தவித்த பஞ்சாப்.

Highlights: Pune Vs Punjab; RPS set up clash with MI in Qualifier 1

புனேயின் அசத்தல் பந்து வீச்சுடன் பஞ்சாபின் மோசமான பேட்டிங்கும் கைகொடுக்க அந்த அணியை 15.5 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருட்டியது. அதிகபட்சமாக அக்சார் பட்டேல் 22 ரன்னும், சகா 13 ரன்னும், ஷேன் மார்ஷ் மற்றும் ஸ்வாப்னில் சிங் தலா 10 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய புனே தொடக்க வீரரான திரிபாதி 20 பந்தில் 28 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதையடுத்து ரகானேவுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால் புனே அணி 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரகானே 34 பந்தில் 34 ரன்களுடனும், ஸ்மித் 18 பந்தில் 15 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். டோணி 3 கேட்ச்களைப் பிடிக்க புனே அணியின் உனட் கட், ஆடம் ஸாம்ப்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெடுகளை வீழ்த்த தாக்குர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக ஜெய்தேவ் உனட்கட் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 14 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்று புனே அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Story first published: Sunday, May 14, 2017, 20:59 [IST]
Other articles published on May 14, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+