Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL வரலாற்றிலேயே 2வது அதிகபட்ச ஸ்கோர்.. முழுசா சந்திரமுகியாக மாறிய லக்னோ பேட்டிங்.. சிக்சர் மழை

மொஹாலி: ஐபிஎல் தொடரில் லக்னோ அணி இன்று ரசிகர்களுக்கு ரமலான் பிரியாணி விருந்தை ரசிகர்களுக்கு கொஞ்சம் தாமதமாக வழங்கியது. லக்னோ அணி வீரர்கள் ஆமை வேகத்தில் ரன் சேர்ப்பார்கள் என்று கடும் விமர்சனம் அன்மையில் எழுந்தது.

லக்னோ அணி கடந்த ஆட்டத்தில் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்தது. ஆனால் இம்முறை அதற்கு ரசிகர்களிடம் பரிகாரம் தேடும் வகையில் இன்று லக்னோ அணி வீரர்கள் பட்டையை கிளப்பினர்.

Historical batting by LSG and KL Rahul team sets massive target

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, கேஎல் ராகுல் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் எடுத்து 9 பந்தில் 12 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால், மற்ற வீரர்களுக்கு பவர்பிளேவில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 2வது விக்கெட்டுக்கு கெயில் மேயர்ஸ் மற்றும் ஆயுஷ் பதோனி ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பியது.

மெயர்ஸ் இன்று முழு சந்திரமுகியாவே மாறிய மெயர்ஸ், 24 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். பவர்பிளேவில் லக்னோ அணி 74 ரன்கள் சேர்த்த நிலையில், மெயர்ஸ் பெவிலியன் திரும்பினார். எப்போதும் 7வ ஓவரிலிருந்து 15வ ஓவர் வரை எப்போதும் அணியின் ரன் சேர்க்கும் வேகம், சரிந்துவிடும்.

ஆனால் லக்னோ அணி வீரர்கள் எக்ஸ்பிரஸ் சாலையில், மூன்றாவது கியரிலிருந்து 5வது கியருக்கு வேகத்தை கூட்டி பட்டையை கிளப்பினர். ஆயுஷ் பதோனி 24 பந்தில் 44 ரன்கள் எடுக்க, இதில் 3 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். மார்க்ஸ் ஸ்டோனிஸ், இன்று காலில் சலங்கை கட்டி கொண்டு பேய்யாட்டம் ஆடினார்.

EA cricket 2007 வீடியோ கேமில் வருவது போல் ஸ்டோனிஸ் 5 சிக்சர்களையும், 6 பவுண்டரிகளையும் பறக்கவிட, 40 பந்தில் 72 ரன்கள் விளாசினார். இதனால் 7வது ஓவரிலிருந்து 15வது ஓவர் வரை 110 ரன்களை விளாசி இருக்கிறது. இந்த ஸ்கோர் பத்தாது என்று இறுதியில், நிக்கோலஸ் பூரான்,19 பந்தில் 45 ரன்கள் விளாச, லக்னோ அணி 20 ஓவா முடிவில் 257 ரன்களுக்கு 5 விக்கெட்டுக இழந்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோராகும்.

Story first published: Friday, April 28, 2023, 21:31 [IST]
Other articles published on Apr 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+