Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் உலகை ஆட்டிப்படைக்கும் இரண்டு தலைகள்.. சூதாட்ட முதலைகளின் பின்புலம்

டெல்லி: சோபர் ஜோபன், பிரியங் சக்சேனா என்ற இரண்டு சூதாட்டகாரர்கள் இந்திய கிரிக்கெட் உலகை தங்கள் மொத்த கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். இந்த இரண்டு பேரின் பின்புலமும், வரலாறும் தற்போது தெரிய வந்து இருக்கிறது.

தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்று இவர்களிடம் 'ஸ்டிங் ஆப்ரேஷன்' முதல் சூதாட்டம் செய்ய வேண்டும் என்று பொய் சொல்லி உண்மைகளை வாங்கி இருக்கிறது. இவர்கள் ஏற்கனேவே ஆஷஸ் தொடரில் நடக்க போகும் சூதாட்டம், ஐபிஎல் 2018ல் நடக்க இருக்கும் சூதாட்டம் குறித்து பேசியுள்ளனர்.

தற்போது இவர்களுக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் வீரர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சில முக்கிய வீரர்களுடன் இவர்கள் நெருக்கமாக இருந்துள்ளனர்.

யார் இந்த சோபர் ஜோபன்

யார் இந்த சோபர் ஜோபன்

சோபர் ஜோபன் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்காக மிகவும் கடினமாக முயற்சி செய்து கொண்ட இருந்தார். இவர் டெல்லி அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இப்போதும் கூட சில கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இவர்தான் தற்போது சூதாட்ட உலகில் நம்பர் 1 நபர். இவர் பேச்சுக்கு பல தொழில் அதிபர்கள் கட்டுப்படுவார்கள். இவர் கடந்த 10 வருடமாக சூதாட்டம் செய்து வருகிறார்.

பணக்கார வாழ்க்கை

பணக்கார வாழ்க்கை

சூதாட்டம் மூலம் இவருக்கு கமிஷன் தொகையே லட்சக்கணக்கில் வருகிறது. இவருக்கு சொந்தமாக டெல்லி வசந்த் விகார் என்ற பகுதியில் வீடு இருக்கிறது. மேலும் இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார். அதுபோல் இவருடைய பேஸ்புக் பக்கத்தில் இதுகுறித்த போட்டோக்களை வெளியிடுகிறார். இவருடைய வெளிநாட்டு பயணங்கள் அனைத்து தொழில் அதிபர்கள் மூலம் திட்டமிடப்படுகிறது.

பிரியங் சக்சேனா

பிரியங் சக்சேனா

பிரியங் சக்சேனா போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சொந்தமாக சிகரெட் கம்பெனி ஒன்று இருக்கிறது. இவருக்கு தென்னாபிரிக்கா பிடிக்கும் என்பதால் எப்போது அந்த இடத்தில் இருப்பது வழக்கம். இவர்தான் கிரிக்கெட் வீரர்களுடன் நேரடியாக தொடர்பில் இருப்பார். முக்கியமாக சோபர் ஜோபனின் நெருங்கிய நண்பராகவும் இவர் உள்ளார். ஆஷஸ் தொடரில் சூதாட்டம் செய்வதற்காக இவர் தற்போது ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

யாருடன் தொடர்பு

யாருடன் தொடர்பு

இந்த இரண்டு பேருக்கும் இந்திய அணியின் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. முக்கியமாக விராட் கோஹ்லியும் இவரும் டெல்லி அணிக்காக ஒன்றாக விளையாடி உள்ளனர். பல ஐபிஎல் போட்டிகளில் இவர்கள் பெரிய தலைகளுடன் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. வீரர்கள் மட்டும் இல்லாமல் சில நடுவர்களுடனும் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

Story first published: Thursday, December 14, 2017, 13:50 [IST]
Other articles published on Dec 14, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+