Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை பத்தி ஜடேஜா சொன்ன அந்த விஷயம்..!! மண்டை காய்ந்து, கடுப்பான ரோகித்..!! கலக்கும் வீடியோ

Recommended Video

கோலியை கண்டு பிடித்த ரோஹித் சர்மா-வீடியோ

புளோரிடா: ஹிட் மேன் ரோகித் சர்மா மற்றும் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகிய இருவரும் டம் சராட் விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா, வெஸ்ட் இண்டீசுக்கு இடையேயான 2வது டி20 போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஹிட்மேன் ரோகித் ஷர்மா 67 ரன்கள் குவித்தார்.

Hitman rohit and jadeja played and imitates dumb charade

தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 15.3 ஓவர்களுக்கு 4 விக்கெட்டை இழந்து 98 ரன்களை எடுத்திருந்தது. மழை குறுக்கிட்டதால் போட்டி பாதியில் கைவிடப் பட்டது. டிஎல்எஸ் முறைப்படி இந்தியா 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனால் இந்திய அணி 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் டி 20 தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இந்நிலையில் ரோகித் ஷர்மா மற்றும் ஜடேஜா இருவரும் டம் சராட் என்னும் விளையாட்டை விளையாடினர். அதாவது செய்கையின் மூலம் அட்டையில் எழுதி வைக்கப்பட்டுள்ள வீரரின் பெயரை கண்டுபிடிப்பதாகும்.

விளையாட்டின் போது கோலியின் பெயர் வர, அவர் போல ஜடேஜா நடித்து காட்டினார். இதை கண்டுபிடிக்க முடியாமல் முதலில் லேசாக தடுமாறினார் ரோகித். பின்னர் சுதாரித்த கோலி ஒரு வழியாக யார் என்று கண்டுபிடித்தார்.

அப்போது அங்கிருந்த கோலியும் இதை பார்த்து சிரிக்க ஏக ரகளைதான். கோலி, ரோகித் இடையே மோதல், சண்டை, புகைக்சல் என்ற செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

Story first published: Tuesday, August 6, 2019, 8:44 [IST]
Other articles published on Aug 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+