Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட.. இப்படியும் ஒரு சாதனையா..!! யாராவது கேள்விப்பட்டிருக்கீங்களா…? வாழ்த்துகள் ரோகித்…!!

Recommended Video

WORLD CUP 2019 IND VS SA | 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

சவுதாம்ப்டன்:தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் மூலம், ஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்திருக்கிறார் ரோகித் சர்மா.

பெரும் எதிர்பார்ப்புடன் உலக கோப்பையில் தமது முதல் போட்டியை தென் ஆப்ரிக்காவுடன் விளையாடியது. டாசில் தோற்ற இந்தியா. வென்ற தென் ஆப்ரிக்கா, முதலில் களம் இறங்கியது. இது தான் நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு முதல் போட்டி.

எனவே... உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். முதலில் களம் இறங்கியது தென் ஆப்ரிக்கா. தொடக்க வீரர்களாக ஆம்லாவும், டி காக்கும் வந்தனர். ஏதோ இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்வது போல வந்தனர்.

கலக்கல் பந்துவீச்சு

கலக்கல் பந்துவீச்சு

ஆனால்... களத்தில் நடந்த கதையே வேறு.. இந்திய பந்துவீச்சை இப்படி இருக்கும் என்று நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள். ராக்கெட் சயின்ஸ், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா ஒரு கலக்கு கலக்கினார். 6 ரன்கள் எடுத்திருந்த ஆம்லா... அவுட்.

அதிர்ந்த தென் ஆப்ரிக்கா

அதிர்ந்த தென் ஆப்ரிக்கா

அடுத்து 2 ஓவர்களுக்குள் டி காக்... காலி... பெவிலியனுக்கு அனுப்பி வைத்தது பும்ரா. 24 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகள். எடுத்த எடுப்பிலேயே விக்கெட்கள் விழுந்ததால் செமத்தியாக அதிர்ந்து போனது தென் ஆப்ரிக்க அணி. 3வது விக்கெட்டுக்கு ஓரளவு தாக்குப்பிடித்தனர் வான்டர் டசனும், டுபிளெசிசும்.

ஒட்டுமொத்தமாக சரிவு

ஒட்டுமொத்தமாக சரிவு

அதுவும் ரொம்ப நேரம் இல்லை. இந்திய பவுலிங் யூனிட்டால் ஒட்டுமொத்தமாக சரிந்தது தென் ஆப்ரிக்க அணி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோர் கடைசியில் புஸ்ஸாகி போனது. 50 ஓவர்களை முழுமையாக விளையாடுவதற்கே ஏகத்துக்கும் திணறி போயினர்.

பிளான் என்னானது?

பிளான் என்னானது?

227 ரன்கள் மட்டுமே எடுத்தது தென் ஆப்ரிக்க அணி. பிளான் ஏ வைத்திருக்கிறோம்.... இப்போ மாத்தி பிளான் பி வைத்திருக்கிறோம்... என்ற கதை விட்ட தென் ஆப்ரிக்கா அணி 227 ரன்களுக்குள் தங்களது இன்னிங்சை முடித்துக் கொண்டது.

கலக்கிய ரோகித்

கலக்கிய ரோகித்

228 ரன்கள் வெற்றிக்கு என்ற இலக்குடன் களம் இறங்கியது இந்தியா. தவான் ஏமாற்றினார் 8 ரன்கள் எடுத்து. கேப்டன் கோலியும் 18 ரன்களில் திருப்தி அடைந்து வெளியேறினார். ஹிட் மேன் ரோகித் களத்தில் கலக்கினார்.

700 பவுண்டரிகள்

700 பவுண்டரிகள்

இன்றைய போட்டியில் ஒரு முக்கியமான அவ்வளவாக யாரும் அறிந்திராத சாதனையை படைத்திருக்கிறார். ஒரேயொரு பவுண்டரி அடித்தால் ஒரு நாள் கிரிக்கெட் 700வது பவுண்டரி அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

ரபாடாவின் ஓவர்

ரபாடாவின் ஓவர்

யாருடைய பந்தில் அவர் இந்த சாதனையை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சரியாக 8வது ஓவரில் அந்த சாதனையை அவர் படைத்தார். ஓவரை வீசியது ரபாடா. அந்த ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்தார்.

குவியும் வாழ்த்துகள்

குவியும் வாழ்த்துகள்

இது ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது 700வது பவுண்டரி. ஆனால்..அந்த பந்துக்கு முதல் பந்தில் அவர் சிக்சர் அடித்தது தனிக்கதை. 700 பவுண்டரிகள் அடித்து சாதனை பண்ணிய அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.

Story first published: Wednesday, June 5, 2019, 21:20 [IST]
Other articles published on Jun 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+