Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க வீட்டு, எங்க வீட்டு அடியல்ல.. மரண அடி!

ஹெடிங்க்லே: டேய். அவன் உடம்புக்குள்ள ஏதோ ஆவி புகுந்துவிட்டது போல இருக்கு என, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் புலம்பும் வகையில், உங்க வீட்டு, எங்க வீட்டு அடியல்ல, மரண அடி அடித்து, வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு, சாதனை வெற்றியை தேடித் தந்தார் ஷாய் ஹோப்.

இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இன்டீஸ் அணி, மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற, இரண்டாவது டெஸ்ட் போட்டி, லீட்ஸ் மைதானத்தில் நடந்தது.

இங்கிலாந்து, 258 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது. வெஸ்ட் இன்டீஸ், 427 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில், இங்கிலாந்து அணி, 490 ரன்கள் எடுத்தது.

4வது நாளில், 6 ஓவர்கள் மட்டுமே இருக்கையில், டிக்ளேர் செய்தார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். வெற்றிக்கு 322 ரன்கள் தேவை என்ற இலக்குடன், பவுலர்கள் மீதான நம்பிக்கையில், ஜோ ரூட் டிக்ளேர் செய்தார்.

களமிறங்கிய ஹோப்

களமிறங்கிய ஹோப்

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இன்டீஸ் அணி, 53 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் இன்னிங்சில், 147 ரன்கள் விளாசிய ஷாய் ஹோப், அப்போது களமிறங்கினார். இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி, அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றுவார் என, ஷாய் ஹோப் மீது, கேப்டன் ஜாசன் ஹோல்டர் நம்பிக்கையுடன் இருந்தார்.

அதிரடி சரவெடி

அதிரடி சரவெடி

கேப்டனின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், அதிரடியாக விளையாடி, ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். முதல் இன்னிங்சில் சதமடித்த ஓப்பனரான கிரெய்க் பிராத்வெயிட், 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், ஹோப்புடன் பிராத்வெயிட் இணைந்து, 144 ரன்கள் எடுத்தது, அணிக்கு வெற்றியை உறுதி செய்தது.

17 ஆண்டுக்குப் பிறகு

17 ஆண்டுக்குப் பிறகு

இதன் மூலம், இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக, 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. மேலும் 3 போட்டிகள் தொடர், 1-1 என சமநிலை ஏற்பட்டுள்ளது.

சாதனை

சாதனை

இதற்கு முன், 11 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஹோப், ஒன்றில் கூட சதத்தை எட்டவில்லை. ஆனால், இந்த முறை, இரண்டு இன்னிங்சிலும் சதமடித்து சாதனை படைத்துள்ளார்.

127 ஆண்டு வரலாற்றில்

127 ஆண்டு வரலாற்றில்

ஹெடிங்க்லே மைதானத்தின், 127 ஆண்டு வரலாற்றில், இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த முதல் வீரராக அவர் திகழ்கிறார். வெஸ்ட் இன்டீஸ் முன்னாள் ஓப்பனரான, கார்டன் கிரீனிட்ச், இங்கிலாந்தின் ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில்,1976ல் இரண்டு இன்னிங்சிலும் சதமடித்துள்ளார்.

ரூட் சாதனை

ரூட் சாதனை

தற்போது ஜோ ரூட் செய்ததைப் போலவே, 1984ல் அப்போதைய கேப்டன் டேவிட் கோவர் செய்தார். அப்போது நடந்த டெஸ்ட் போட்டியில், 342 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்து, டிக்ளேர் செய்தார் கோவர். இரண்டாவது இன்னிங்சில், கார்டன் கிரீனிட்ச், ஆட்டமிழக்காமல், 214 ரன்களும், லேரி கோம்ஸ், ஆட்டமிழக்காமல், 92 ரன்களும் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில், வெஸ்ட் இன்டீஸ் வென்றது.

தற்போது, அதுபோன்ற ஒரு புயல் ஆட்டத்தை ஆடி, அணிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார் ஹோப்.

Story first published: Wednesday, August 30, 2017, 16:58 [IST]
Other articles published on Aug 30, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+