Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணியை தோற்கடித்த சிஎஸ்கே வளர்ப்பு.. மாணிக்கமாக இருந்து பாட்ஷாவாக விஸ்வரூபம் எடுத்த அஸ்வின்

Recommended Video

சென்னைக்கு எதிரான போட்டியில் புதிய அவதாரம் எடுத்த அஸ்வின்- வீடியோ

மொஹாலி: ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி அதிரடியாக வெற்றி பெற்று இருக்கிறது. பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் அந்த அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார்.

கடைசி நேர டோணி அதிரடி காரணமாக சென்னை அணி வென்று விடுமோ என்று ரசிகர்கள் சந்தோசத்தில் இருந்தார்கள். ஆனால் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கடைசியில் வெற்றிபெற்றது.

கெயிலை அணியில் கொண்டுவந்தது முதல், அஸ்வினின் புதிய ஆல் ரவுண்டர் அவதாரம் வரை எல்லாமும் சென்னை அணிக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது. சென்னைக்கு எதிரான அவரது இந்த வெற்றி, அஸ்வின் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று.

பல நாள் எதிர்பார்ப்பு

பல நாள் எதிர்பார்ப்பு

அஸ்வின் பஞ்சாப் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். சில நாளில் ஐபிஎல் தொடருக்கான தேதி குறிக்கப்பட்டது. அப்போதே ஏப்ரல் 15ம் தேதியை சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து வைத்துக் கொண்டார்கள். டோணியும், அஸ்வினும் மோதும் போட்டி எப்படி இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். அதன் காரணமாகவே நேற்றைய போட்டி பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தது.

சரியான நேரத்தில் கெயில்

சரியான நேரத்தில் கெயில்

இவ்வளவு போட்டிகளில் கெயிலுக்கு பஞ்சாப் அணியில் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் சென்னை அணியின் பவுலிங் ஆர்டர் அத்தனை சிறப்பாக இல்லாத காரணத்தால் அஸ்வின் கெயிலுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கி பார்க்கலாம் என்று வழங்கினார். ஆனால் நேற்று கெயில் ஆடிய ஆட்டம், ஏலியன் லெவல் ஆட்டம். 33 பந்துகளில் 66 எடுத்து மொஹாலி மைதானத்தை வாய் பிளக்க வைத்தார்.

அஸ்வின் ஆல்ரவுண்டர்

அஸ்வின் ஆல்ரவுண்டர்

அஸ்வின் கேப்டன் ஆன பின் நிறைய மாற்றங்களை சந்தித்துள்ளார். முன்பு வெறும் பவுலராக இருந்த அஸ்வின் இப்போது நல்ல பேட்ஸ்மேனாகவும் மாறியுள்ளார். அதேபோல் இவரது பீல்டிங்கை வைத்து கிண்டல் செய்பவர்களுக்கு நேற்றைய போட்டியில் சரியான பதிலடி கொடுத்துள்ளார். முக்கியமாக தன்னுடைய தேவையை உணர்த்த, லெக் ஸ்பின் ஆஃப் ஸ்பின் இரண்டையும் கற்றுக் கொண்டு உள்ளார்.

தலைமை

தலைமை

கெயிலை அணியில் எடுத்தது தொடங்கி அஸ்வினின் தலைமைப்பண்பு நாளுக்கு நாள் நன்றாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முஜீப் உர் ரஹ்மானை தன்னுடன் சேர்த்துக் கொண்டு பவுலிங்கில் ஈடு கொடுத்தது. சரியான நேரத்தில் ராயுடு விக்கெட்டை எடுத்தது. ஜடேஜாவை வைத்து ரன் ரேட்டை கட்டுப்படுத்தியது என்று மிகவும் சிறப்பாக பணியாற்றினார். அவரது பீல்டிங் செட்டப்பும் முன்பைவிட நன்றாக வளர்ந்துள்ளது.

நல்ல எதிர்காலம்

நல்ல எதிர்காலம்

அஸ்வின் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று பல வழிகளை முயற்சித்து வருகிறார். ஸ்பின் ஸ்டைலை மாற்றியது, பேட்டிங்கில் நன்றாக பயிற்சி எடுத்து ஆல் ரவுண்டர் ஆகி இருப்பது என நிறைய மாற்றங்களை செய்துள்ளார். இது இந்திய அணி தேர்வில் மீண்டும் அவர் மீது பார்வை பட வைக்கும். இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு பெரிய திருப்பு முனையாக இருக்கும்.

Story first published: Monday, April 16, 2018, 14:42 [IST]
Other articles published on Apr 16, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+