Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எப்படியாவது ஜெயிச்சிருங்க நண்பா.. சிஎஸ்கேவை நம்பி இருக்கும் 4 அணிகள்.. CSK கையில் RCB விதி

சென்னை : ஐபிஎல் புள்ளி பட்டியல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் நெருக்கடியில் இருக்கிறது. தற்போது வரை ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு ,பஞ்சாப் ஆகிய அணிகள் 10 புள்ளிகள் உடன் இருக்கிறார்கள்.

முதல் நான்கு இடத்தில் குஜராத் 16 புள்ளிகளுடன் ,சென்னை 13 புள்ளிகள் அடங்கும் மும்பை 12 புள்ளிகள் உடனும் லக்னோ 11 புள்ளிகள் உடனும் அடுத்தடுத்து இருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை டெல்லி அணிகள் மோதும் ஆட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததை பெற்றிருக்கிறது.

How CSK win will gives advantage for 4 teams in ipl points table

தற்போது டெல்லி அணி பத்து போட்டியில் விளையாடி 8 புள்ளிகள் உடனும் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் எஞ்சிய அனைத்து போட்டிகளும் டெல்லிக்கு வாழ்வா சாவா ஆட்டம் தான். தற்போது டெல்லி அணி இரண்டு முறை சிஎஸ்கே வை சந்திக்க உள்ளது. இதில் சிஎஸ்கே அணி ஒரு முறையாவது டெல்லி அணியை வீழ்த்த வேண்டும்.

அப்படி நடந்தால் அது டெல்லியின் வாய்ப்பை முடிப்பதோடு ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு அது பெரிய நன்மையை கொடுக்கும்.இதனால் சிஎஸ்கே வை நம்பி தான் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் தற்போது இருக்கிறது. எப்போதும் சிஎஸ்கேவை வம்பு இழுக்கும் ஆர் சி பி ரசிகர்கள் இன்று சிஎஸ்கே வின் வெற்றிக்காக குரல் கொடுப்பார்கள். ஏனென்றால் rcb-யின் விதி தற்போது சிஎஸ்கே வின் கையில் தான் இருக்கிறது.

ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவினால், டெல்லி அணியும் 10 புள்ளிகள் உடன் மற்ற அணிகளுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும். அது ஐபிஎல் பந்தயத்தை மேலும் விறுவிறுப்பாக மாற்றிவிடும். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை முதல் இரண்டு இடங்களை குவிக்க அதிகபட்சம் நான்கு போட்டிகளிலும் குறைந்தபட்சம் மூன்று போட்டிகள் ஆவது வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 10, 2023, 20:32 [IST]
Other articles published on May 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+