For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசை இல்லை பாஸ்.. 2 வருஷ பசி.. சிஎஸ்கேவை மூச்சாக நேசிக்கும் தோனி.. கோப்பையை வென்றது எப்படி!

சென்னை அணி ஐபிஎல் 2018 கோப்பையை வென்றதற்கு பின், தோனியின் கட்டுக்கோப்பான தலைமைப் பண்பு இருக்கிறது.

By Shyamsundar

Recommended Video

சிஎஸ்கே தோனி...கோப்பையை வென்றது எப்படி?- வீடியோ

சென்னை: சென்னை அணி ஐபிஎல் 2018 கோப்பையை வென்றதற்கு பின், தோனியின் கட்டுக்கோப்பான தலைமைப் பண்பு இருக்கிறது. அணியை மிகவும் நேர்த்தியாக அவர் வழிநடத்தி சென்றது கோப்பையை அவருக்கு பரிசாக அளித்துள்ளது.

சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அதிரடியாக வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை எளிதாக இலக்கை அடைந்து வெற்றிபெற்றுள்ளது.

இதில் தொடக்கத்தில் கொஞ்சம் திணறிய சென்னை அதன்பின் அதிரடியாக ஆடியது. சென்னை எளிதாக 19 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

வித்தியாசம்

வித்தியாசம்

சிஎஸ்கே அணியின் தேர்விற்கு பின் தோனி மிக முக்கியமான பங்கு வகித்தார் என்று ஏற்கனவே கூறப்பட்டது. ராயுடுவை கண்டிப்பாக அணியில் எடுக்க வேண்டும் என்று அவர் அணி நிர்வாகத்திடம் கேட்டு இருந்தார். இந்த வீரர்கள்தான் வேண்டும், இந்த இடத்திற்கு இவர்கள்தான் சரியாக இருப்பார்கள் என்று ஒவ்வொரு வீரராக பார்த்து அணியில் தேர்வு செய்தார். சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூட, அணி தேர்வில் தோனி நிறைய அறிவுரை வழங்கினார் என்று பேட்டியளித்திருந்தார்.

அணியை மாற்றினார்

அணியை மாற்றினார்

சென்னை அணி மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் திணறிய பின், தோனி அணியின் விளையாட்டு முறையை மாற்றினார். கொஞ்சம் கொஞ்சமாக, வீரர்களின் இடங்களை மாற்றி சென்னை அணியை ஒரு நிலைக்கு கொண்டு வந்தார். முக்கியமாக அம்பதி ராயுடுவை, ஓப்பனிங், இரண்டாவது இடம், மூன்றாவது இடம், 4 வது இடம் என எல்லா ஆர்டர்களிலும் இறங்க வைத்து, பயிற்சி கொடுத்தார். பவுலிங் ஆர்டரையும் சரியாக நிலைக்கு மாற்றினார்.

அவ்வப்போது கோபம்

அவ்வப்போது கோபம்

எப்போதும் கோபம் கொள்ளாத தோனி இந்த ஐபிஎல் தொடரில் சில இடங்களில் கோபப்பட்டார். பல முறை டெத் ஓவர்களில் சரியாக பந்து வீசாத வீரர்களை கடிந்து கொண்டார். ஒவ்வொரு வீரருக்கும் ஏற்படும் பிரச்சனைகளை, முன்னின்று கவனித்துக் கொண்டு அணியை வழிநடத்தினார். அணியில் இருந்து முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய பின்பும் கூட புதிய வீரர்களை கொண்டு வந்து அணியை நிலைப்படுத்தினார்.

பார்மிற்கு கொண்டு வந்தார்

பார்மிற்கு கொண்டு வந்தார்

ஐபிஎல் தொடரில் எப்போதும் இருக்கும் தோனி மேஜிக் இதிலும் இருந்தது. தோனிக்கு கீழ் விளையாடினால் கண்டிப்பாக வீரர்கள் பார்மிற்கு திரும்புவார்கள் என்பார்கள். நெஹ்ரா தொடங்கி இப்போது ராயுடு, ரெய்னா வரை இதுதான் நடந்தது. பார்ம் அவுட் வீரர்கள் எல்லோரையும் அணியில் எடுத்துவிட்டு எல்லோருக்கும் சரியாக பயிற்சி அளித்து, மன நிலையை மாற்றி அவர்களை பார்மிற்கு கொண்டு வந்தார். இதில் தோனி பார்மிற்கு திரும்பியதும் அடக்கம்.

இரண்டு வருட பசி

இரண்டு வருட பசி

தோனியின் இந்த வித்தியாசமான அணுகுமுறைக்கு பின் மிக முக்கியமான காரணம் இருக்கிறது. இரண்டு வருடம் சென்னை அணி இல்லாமல், அவர் மிகவும் கஷ்டப்பட்டதாக பேட்டியளித்து இருந்தார். அந்த இரண்டு வருட பசியை கொஞ்சம் கொஞ்சமாக வெறியாக மாற்றி, ஒவ்வொரு போட்டியாக முன்னேறி சென்று கடைசியில் ஹைதராபாத்தை வீழ்த்திய அந்த தோனி கோப்பையை தூக்காமல் ஷிவாவை தூக்கி கொஞ்சிக் கொண்டு இருந்தார்.. வெற்றியை அவர் இப்படித்தான் கொண்டாடுவார்.

Story first published: Monday, May 28, 2018, 9:52 [IST]
Other articles published on May 28, 2018
English summary
Dhoni leads CSK team to win the IPL 2018 title in his own swag.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+