Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸில் தோனியா? அப்படிலாம் விட முடியாது.. அம்பானிக்கே செக் வைத்த சிஎஸ்கே.. தரமான சம்பவம்

மும்பை : தோனி மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுவதை எந்த கிரிக்கெட் ரசிகராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

Recommended Video

Dhoni- ஐ வியந்து பாராட்டிய முன்னாள் West Indies வீரர்

ஆனால், அதற்கு ஒரு முயற்சி நடந்தது. ஆம், இப்போது அல்ல. ஐபிஎல் துவங்கிய போது.

2008 ஐபிஎல் ஏலத்தில் தோனியை வாங்கியே தீருவோம் என சொல்லி அடித்த கில்லியாக களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்-உடன் மும்பை இந்தியன்ஸ் கடுமையாக போட்டி போட்டு இறுதியில் தோற்றது.

2008 ஐபிஎல் ஏலம்

2008 ஐபிஎல் ஏலம்

2008 ஐபிஎல்-இல் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த ஜாம்பவான் வீரர் ஒருவரை அந்தந்த அணிகளில் நேரடியாக தேர்வு செய்யும் வாய்ப்பு இருந்தது. சச்சின் டெண்டுல்கர் மும்பை அணிக்கு சென்றார். கங்குலி கொல்கத்தா அணியிலும், டிராவிட் பெங்களூர் அணியிலும் தேர்வு செய்யப்பட்டனர். யுவராஜ் சிங் பஞ்சாப் அணியிலும் தேர்வு செய்யப்பட்டனர்.

சொந்த அணி இல்லாத தோனி

சொந்த அணி இல்லாத தோனி

தோனி ராஞ்சியை சேர்ந்தவர் என்பதால் எந்த அணியிலும் அவர் ஏலத்தில் விடப்பட்டார். அதே போல, சிஎஸ்கே அணிக்கும் எந்த ஜாம்பவான் வீரரையும் தேர்வு செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால், சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் முதலில் தோனியை வாங்கும் எண்ணத்தில் இல்லை.

சேவாக்கை விரும்பிய சீனிவாசன்

சேவாக்கை விரும்பிய சீனிவாசன்

சேவாக் முதலில் ஜாம்பவான் வீரர் என்ற பிரிவில் இடம் பெறவில்லை. அதனால், அதிரடி வீரரான சேவாக்கை வாங்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். ஆனால், சிஎஸ்கே-வில் தேர்வுக் குழு தலைவராக இருந்த விபி சந்திரசேகர் வேறு கருத்தை கூறி உள்ளார்.

சிஎஸ்கே எடுத்த முடிவு

சிஎஸ்கே எடுத்த முடிவு

விபி சந்திரசேகர் தோனியை தேர்வு செய்யலாம் என கூறி உள்ளார். அது பற்றி விவாதம் நடந்து, பின்னர் சேவாக்கையும் வாங்க முடியாது என்ற நிலையில் தோனியை வாங்க முழு மனதாக முடிவு எடுத்தது சிஎஸ்கே அணி. ஏலத்தில் முதல் வீரராக ஷேன் வார்னே இடம் பெற்றார். ராஜஸ்தான் அணி அவரை வாங்கியது.

தோனி ஏலம்

தோனி ஏலம்

அடுத்ததாக தோனியின் பெயர் வந்தது. அவரது அடிப்படை விலை இந்திய மதிப்பில் 3 கோடி. சிஎஸ்கே அணி துவக்கம் முதலே தோனிக்கு ஏலம் கேட்டது. எந்த வீரருக்கும் இல்லாத வகையில் மும்பை இந்தியன்ஸ் தவிர அனைத்து அணிகளும் தோனியை வாங்க போட்டி போட்டன.

மும்பை இந்தியன்ஸ் போட்டி

மும்பை இந்தியன்ஸ் போட்டி

ஏலத் தொகை 6.75 கோடியை தாண்டியது. அப்போது களத்தில் குதித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதன் பின் சிஎஸ்கே - மும்பை இடையே கடும் போட்டி நிலவியது. ஏலத் தொகை 7.5 கோடியை தாண்டிய போது அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

சிஎஸ்கே கேட்ட தொகை

சிஎஸ்கே கேட்ட தொகை

ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சிக்கலை பயன்படுத்தி சிஎஸ்கே அணி 11.5 கோடி ஏலம் கேட்டது. அதன் பின் மும்பை ஏலம் கேட்காது என்பதை உணர்ந்தே சிஎஸ்கே அத்தனை பெரிய தொகையை கூறியது. அப்போது மும்பை அணி சச்சினை ஜாம்பவான் வீரர் என்ற அடிப்படையில் பெற்று இருந்தது.

சச்சின் சிக்கல்

சச்சின் சிக்கல்

ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரை விட 15 சதவிகிதம் கூடுதல் தொகையை ஜாம்பவான் வீரருக்கு அளிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. தோனியை 11.5 கோடிக்கு மேல் வாங்கினால் அதை விட அதிக தொகையை சச்சினுக்கு கொடுக்க வேண்டும். அப்போது மொத்தமே 37 கோடி தான் வீரர்களை வாங்க பயன்படுத்தலாம். இரண்டு வீரர்களுக்கே 60 சதவிகித பணத்தை செலவு செய்தால் சிக்கலாகி விடும் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி விலகியது.

தலைப்புச் செய்தி

தலைப்புச் செய்தி

அம்பானியின் மும்பை இந்தியன்ஸ்-ஐயே வீழ்த்தி சிஎஸ்கே அணி தோனியை யாரும் எதிர்பார்க்காத அளவு 11.5 கோடி கொடுத்து வாங்கியது அந்த நாள் முழுவதும் தலைப்புச் செய்தியாக இருந்தது. சச்சினை விட தோனிக்கு கூடுதல் தொகை கொடுத்ததும் பரபரப்பாக பேசப்பட்டது.

மூன்று கோப்பைகள்

மூன்று கோப்பைகள்

அன்று சிஎஸ்கே அணி தோனியை வாங்கியது எத்தனை சரியான முடிவு என இப்போது சிந்தித்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது. இப்போது உள்ள சிஎஸ்கே அணி தோனியை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது. தோனி மூன்று ஐபிஎல் கோப்பைகள் பெற்றுக் கொடுத்ததோடு, ஒவ்வொரு சீசனிலும் சிஎஸ்கே அணியை பிளே-ஆஃப் செல்ல வைத்து இருக்கிறார்.

Story first published: Sunday, August 23, 2020, 18:26 [IST]
Other articles published on Aug 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+