Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்… கவுரவித்த ஐசிசி..!! வெளியான புதிய உண்மை

Recommended Video

ICC HALL OF FAME | சச்சினுக்கு இன்னொரு மணி மகுடம்.. தாமதிக்காத ஐசிசி!- வீடியோ

மும்பை: டிராவிட்டுக்கு பின்னர், சச்சினுக்கு எப்படி ஹால் ஆப் பேம் பட்டியலில் தேர்வு பெற்றார் என்ற சுவாரசிய தகவல் தற்போது வெளி வந்திருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு, ஹால் ஆப் பேம் என்ற கவுரவத்தை வழங்கியுள்ளது. இந்தியா சார்பில் 6வது வீரராக அவர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அவருக்கு முன்பு இந்தியா சார்பில் பிஷன் சிங் பேடி(2009), சுனில் கவாஸ்கர் (2009), கபில் தேவ்(2009), அனில் கும்ப்ளே(2015), ராகுல் டிராவிட்(2018) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந் நிலையில் அதிக சாதனைகள் படைத்த சச்சினுக்கு முன்பு டிராவிட் தேர்வானது எப்படி என்ற சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது.

விதிகள் என்ன?

விதிகள் என்ன?

ஹால் ஆப் பேம் என்ற கவுரவத்தை 2009ம் ஆண்டு முதல் அளித்து வருகிறது. பட்டியலில் இடம்பெற பேட்ஸ்மேன் ஒருவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8,000 ரன்கள் மற்றும் 20 சதங்கள் அடித்திருக்கவேண்டும்.

200 விக். வேண்டும்

200 விக். வேண்டும்

அதேபோல பவுலராக இருந்தால் அவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியில் குறைந்தது 200 விக்கெட்டுகள் எடுத்திருக்கவேண்டும். இந்த விக்கெட்டுகளை ஒருநாள் போட்டி என்றால், 30 ஸ்டிரைக் ரேட்டுடனும் டெஸ்ட் என்றால் 50 ஸ்டிரைக் ரேட்டுடனும் எடுத்திருக்கவேண்டும்.

5 ஆண்டுகள் நிறைவு

5 ஆண்டுகள் நிறைவு

மேலும் பட்டியலுக்கு தேர்வாக வீரர்கள் ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் முடிந்து இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளின் படி இந்தியாவில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகிய இருவருமே தேர்ச்சி பெறுவர்.

எப்படி வந்தார் டிராவிட்?

எப்படி வந்தார் டிராவிட்?

ஆனால், பட்டியலில் ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்க வேண்டும். சச்சினுக்கு முன் டிராவிட் தேர்வானார். அதற்கு காரணம், அவர் 2012ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால், சச்சின் ஓராண்டு கழித்து 2013ம் ஆண்டு தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். எனவே சச்சினுக்கு முன்பு டிராவிட் பட்டியலில் இடம் பிடித்தார்.

யார்? யார்?

யார்? யார்?

இந்த பட்டியலில் உலக அளவில் 87 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்தில் இருந்து 28 பேர், ஆஸ்திரேலியாவிலிருந்து 26 பேர் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து 18 பேரும், பாகிஸ்தானிலிருந்து 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்காவிலிருந்து 3 பேரும், இலங்கையிலிருந்து ஒருவரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

Story first published: Saturday, July 20, 2019, 8:46 [IST]
Other articles published on Jul 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+