Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் நம்பர் 1.. இந்தியா அடுத்த சுற்று செல்ல என்ன செய்யணும்? ஹாங்காங் சிக்ஸஸ் புள்ளிப்பட்டியல்

மாங் காங்: ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான தனது தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் குரூப் சி பிரிவில் இந்திய அணியின் நிகர ரன் ரேட் -9.072 ஆக அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. எனினும், இந்திய அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு இன்னும் முடிந்துவிடவில்லை.

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் வடிவம் மிகவும் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அணிகளுமே அரையிறுதிப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறும். ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் மொத்தம் 12 நாடுகள் தலா 3 அணிகள் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

How India Can Qualify for Next Round of Hong Kong Sixes 2026 After Defeat to Pakistan

குரூப் சுற்று: ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற 2 அணிகளுடன் தலா 1 முறை மோதும்.

நாக்-அவுட் சுற்று: அடுத்த சுற்று கப், பிளேட், பவுல் (Cup, Plate, Bowl) என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கப் என்பது முதல் இடத்துக்காக மோதும் அணிகளுக்கான உயரிய கோப்பை ஆகும். பிளேட் என்பது இரண்டாவது இடம் பெற்ற அணிகளுக்கான கோப்பை ஆகும். பவுல் என்பது மூன்றாம் இடம் பிடித்த அணிகளுக்கான கோப்பை. ஒவ்வொரு பிரிவிலும் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.

அதாவது நான்கு குரூப்-களில் முதல் இடம் பிடித்த அணிகள் கப் பிரிவு அரையிறுதியிலும், இரண்டாம் இடம் பிடித்த அணிகள் பிளேட் பிரிவு அரையிறுதியிலும், மூன்றாம் இடம் பிடித்த அணிகள் பவுல் பிரிவு அரையிறுதியிலும் மோதும். அதன் பின் ஒவ்வொரு பிரிவிலும் இறுதிப் போட்டிகள் தனியாக நடைபெறும். ஒவ்வொரு நாடும் கப் பிரிவில் கோப்பை வெல்ல வேண்டும் என்றே போராடும். அந்த வகையில் இந்தியாவுக்கு அதற்கான வாய்ப்பு உள்ளதா? என பார்க்கலாம்.

தற்போதைய குரூப் சி புள்ளிப்பட்டியல்:

பாகிஸ்தான்: 2 போட்டிகள் - 1 வெற்றி - 1 தோல்வி - 2 புள்ளிகள் - NRR: +3.617
யுஏஇ: 1 போட்டி - 1 வெற்றி - 0 தோல்வி - 2 புள்ளிகள் - NRR: +0.500
இந்தியா: 1 போட்டி - 0 வெற்றி - 1 தோல்வி - 0 புள்ளிகள் - NRR: -9.072

பாகிஸ்தான் அணி தனது 2 போட்டிகளையும் முடித்துவிட்டது. யுஏஇ-யிடம் தோற்று, இந்தியாவிடம் வென்றது. எனவே, குரூப்பில் மீதமுள்ள ஒரே போட்டி இந்தியா vs யுஏஇ மட்டுமே.

அடுத்த சுற்றுக்கு செல்ல இந்தியா என்ன செய்ய வேண்டும்?

யுஏஇ அணிக்கு எதிராக இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்தியா தோற்றால் புள்ளிகள் ஏதுமின்றி வெளியேறி கடைசி இடத்துக்கான 'பவுல்' பிரிவுக்குச் செல்லும். இந்தியா யுஏஇ அணியை வென்றால், 3 அணிகளுமே தலா 2 புள்ளிகளுடன் சமநிலை பெறும். அப்போது நிகர ரன் ரேட் அடிப்படையில் முதல் 3 இடங்கள் பட்டியலிடப்படும்.

இந்தியாவின் தற்போதைய ரன் ரேட் -9.072 ஆக உள்ளதால், முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் அணியின் ரன் ரேட்டான 3.617என்பதை இந்தியா முந்த வேண்டும். அதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவே உள்ளது. யுஏஇ அணியின் ரன் ரேட்டான +0.500-ஐ முந்தி 2-வது இடத்தைப் பிடித்து பிளேட் பிரிவுக்கு இந்தியா செல்ல வாய்ப்பு உள்ளது. அதற்கும் இமாலய வெற்றி தேவை. ஒருவேளை இந்திய அணி ஹாங்காங் அணியை குறைந்த ரன் வித்தியாசத்தில் வீழ்த்தினால் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாம் இடத்தையே பிடிக்கும்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இந்திய அணி மிகபெரும் ஆதிக்கம் செலுத்தி யுஏஇ அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் ரன் ரேட்டை முந்தி முதல் இடம் பிடித்து கப் பிரிவுக்கு செல்லலாம். யுஏஇ அணியின் நெட் ரன் ரேட்டை முந்தி இரண்டாம் இடம் பிடித்து பிளேட் பிரிவுக்கு செல்லலாம். தோல்வி அடைந்தாலோ, அல்லது நெருக்கமான வெற்றியை பெற்றாலோ பவுல் பிரிவுக்கு செல்லலாம்.

IND vs PAK: 3.5 ஓவரில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான்.. பாண்டியா கேப்டன்சியில் மெகா சொதப்பல்

IND vs PAK: 3.5 ஓவரில் இந்திய அணியை வீழ்த்திய பாகிஸ்தான்.. பாண்டியா கேப்டன்சியில் மெகா சொதப்பல்
Story first published: Friday, October 30, 2026, 13:38 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+