Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாதான் காரணம்?.. இளம் வீரர்கள் வெளியே சென்றது எப்படி? பிரச்சனை தொடங்கியது எங்கே!

சிட்னி: இந்திய வீரர்கள் 5 பேர் கொரோனா விதிகளை மீறியது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் நடந்து வரும் நிலையில் இந்திய வீரர்கள் 5 பேர் கொரோனா விதிகளை மீறி வெளியே சென்றதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் ஹோட்டல் சென்று சாப்பிட்டதுதான் பிரச்னைக்கு காரணம்.

இவர்கள் ஹோட்டலில் சென்று சாப்பிட்டது மட்டுமின்றி அங்கு ரசிகர்களை கட்டிப்பிடித்ததாக தகவல் வெளியானது. இதுதான் ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் சர்ச்சையில் சிக்க காரணம் .

எப்படி

எப்படி

இந்திய வீரர்கள் 5 பேர் கொரோனா விதிகளை மீறியது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த 5 வீரர்களும் தங்கி இருந்த ஹோட்டலில் பாதுகாப்பிற்கு அதிகாரிகள் இருந்தனர். அதேபோல் வீரர்கள் தங்கள் தளத்தை விட்டு வேறு தளத்திற்கு செல்ல கூடாது என்றும் கட்டுப்பாடு இருந்தது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

ஆனால் இந்த கட்டுப்பாடுகளை மீறி இந்திய வீரர்கள் ஐந்து பேர் வெளியே சென்றுள்ளனர். ஹோட்டலுக்கு சென்றது மட்டுமின்றி, அங்கு ரசிகர்களுடன் நெருக்கமாக பழகி உள்ளனர். இது எப்படி அனுமதிக்கப்பட்டது என்று பிசிசிஐ ஆச்சர்யத்தில் உள்ளது. இதனால் ரோஹித் சர்மா மீதும் பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் கோபத்தில் உள்ளனர்.

கோபம்

கோபம்

அந்த 5 வீரர்களில் ரோஹித் சர்மாதான் மூத்த வீரர். அவர்தான் இளம் வீரர்களை வெளியே அழைத்து சென்று இருக்க வேண்டும். ரோஹித் சர்மா அணிக்குள் இணைந்து இரண்டு நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதற்கு முன் இந்திய வீரர்கள் ஹோட்டலுக்கு செல்லவில்லை என்கிறார்கள்.

பொறுப்பு

பொறுப்பு

இதனால் ரோஹித் சர்மாதான் ஒருவேளை இந்த பிரச்சனைக்கு காரணமாக இருப்பாரோ என்று கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐ நிர்வாகிகள் சிலர் ரோஹித் மீது புகார் வைப்பதாக கூறப்படுகிறது. ரோஹித் வருவதற்கு முன் இப்படி நடக்கவில்லை என்று சிலர் கருத்து வைக்கிறார்கள். அதே சமயம் கோலி, பாண்டியா கூடத்தான் தொடருக்கு இடையே ஷாப்பிங் சென்றனர் என்றும் வாதம் வைக்கப்படுகிறது.

ஷாப்பிங்

ஷாப்பிங்

கோலியும் கூடத்தான் விதியை மீறி வெளியே சென்றார் என்று புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் என்ன நடந்தாலும் இந்திய அணி நிர்வாகம் இதுகுறித்து விசாரிக்கும் என்கிறார்கள். இந்திய வீரர்களை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது.

Story first published: Monday, January 4, 2021, 22:31 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+