Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலம் எப்படி நடைபெறும்.. ரசிகர்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்.. இனி இது தெரியாம பார்க்காதீங்க

ஐபிஎல் மினி ஏலத்தில் எதுபோன்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்படும், எப்படி ஒரே நாளில் முடிக்கவுள்ளனர் என்பது குறித்த கேள்விகள் அதிகளவில் கேட்கப்பட்டு வருகின்றன.

2023ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் மினி ஏலம் இன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறவுள்ளது. மதியம் 2.30 மணியளவில் ஏலம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஏலம் என்றால் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கும் ரசிகர்கள் பெரும்பாலோனோர், மற்ற ஏலத்திற்கும் ஐபிஎல் ஏலத்திற்கும் உள்ள வித்தியாசமும், விதிமுறைகளும் புரியாமல் குழம்புகின்றனர். அதுகுறித்து தெளிவாக காணலாம்.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலத்தில் 10 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 87 இடங்கள் காலியாக உள்ளன. இதில் குறைந்தது 75 இடங்களாவது நிரப்படும் என தெரிகிறது. இதற்காக 991 வீரர்கள் முதலில் விண்ணப்பித்திருந்த சூழலில் அவர்களில் இருந்து 405 வீரர்கள் ஏலத்திற்காக இறுதி செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவர்களை எப்படி ஏலம் விடப்போகிறார்கள் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

 ஏலம் எப்படி நடக்கும்

ஏலம் எப்படி நடக்கும்

405 வீரர்கள் என்றால் அத்தனை பேரையும் ஏலம் விட்டுவிட மாட்டார்கள். முதற்கட்டமாக பிசிசிஐ குழு சார்பில் 86 வீரர்கள் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆல்ரவுண்டர்கள், பேட்ஸ்மேன்கள், பவுலர்கள், ஸ்பின்னர்கள் என தனித்தனியாக வகைப்படுத்தி 13 செட்களாக பிரிப்பார்கள். அதில் இருந்து ஒவ்வொரு செட்டாக ஏலத்தில் கொண்டு வருவார்கள். இந்த 86 வீரர்களிலேயே அணிகளின் பெரும்பாலும் இடங்கள் நிரம்பிவிடும்.

 அணிகளின் பரிந்துரை

அணிகளின் பரிந்துரை

இதன்பின்னர் 2வது கட்ட வீரர்கள் ஏலத்திற்கு கொண்டு வருவார்கள். 10 அணிகளிடமும் எந்தெந்த வீரர்கள் வேண்டும் என குறிப்பிட்டு பட்டியலை கேட்டு பெற்று, அவர்களை ஏலத்தில் கொண்டு வருவார்கள். ஒவ்வொரு அணியும் குறைந்தது 10 வீரர்களை எழுதி கொடுக்கும். முதற்கட்ட ஏலத்தில் விலைபோகாமல் போன வீரர்களும், தேவைக்கு ஏற்ப 2வது கட்ட ஏலத்தில் கொண்டு வரப்படுவார்கள்.

 ரூ. 1, 2 என உயர்த்தலாமா?

ரூ. 1, 2 என உயர்த்தலாமா?

சாதாரண ஏலங்களில் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் விலையை உயர்த்தி கேட்கலாம். ஆனால் ஐபிஎல்-ல் குறைந்தது இவ்வளவு தொகை அதிகரித்து கேட்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ரூ. 1 கோடிக்குள் உள்ள ஏலத்தில் குறைந்தது ரூ.5 லட்சம் அதிகரித்து கேட்க வேண்டும்.

ரூ. 1 - 2 கோடி வரையிலான ஏலத்திற்கு குறைந்தது ரூ. 10 லட்சம் அதிகரிக்க வேண்டும்.

ரூ. 2 - 3 கோடி வரையிலான ஏலத்திற்கு குறைந்தது ரூ. 20 லட்சம் அதிகரித்து வேண்டும்

ரூ. 3 கோடிக்கு மேல் சென்றுவிட்டால் குறைந்தது ரூ. 20 லட்சத்திற்கு மேல் எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் கேட்கலாம்.

Story first published: Friday, December 23, 2022, 9:05 [IST]
Other articles published on Dec 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+