Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மறக்கவே இல்லை.. "அதை" நியாபகம் வைத்து தமிழக வீரரை தூக்கிய கோலி.. இந்திய அணியில் இதுதான் ஹைலைட்டே!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்கு தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சர்யம் அளித்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது.

இதில் ஒரு போட்டியில் இந்தியாவும், ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்று இருக்கிறது. மூன்றாவது நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்க உள்ளது.இதே மைதானத்தில் 5 டி 20 போட்டிகளும் நடக்க உள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடருக்கு தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்பட்டது பலருக்கும் ஆச்சர்யம் அளித்துள்ளது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் இவர் சிறப்பாக பவுலிங் செய்தார். மிஸ்டரி ஸ்பின் பவுலரான இவர் பெரிய அளவில் கவனம் ஈர்த்தார்.

எப்படி

எப்படி

இதன் காரணமாக இவரை இந்திய அணியில் ஆஸ்திரேலிய தொடருக்காக தேர்வு செய்தனர். ஆனால் ஐபிஎல் தொடரில் இவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் இவர் சையது முஷ்டாக் கோப்பையில் ஆடவில்லை.

சையது முஷ்டாக் தொடர்

சையது முஷ்டாக் தொடர்

இவரின் திருமணம் காரணமாக சையது முஷ்டாக் மற்றும் விஜய் ஹசாரே கோப்பை தொடர்களில் இவர் ஆடவில்லை. இந்த நிலையில்தான் இவரின் ஐபிஎல் ஆட்டத்தை நினைவு வைத்து கோலி இவரை மீண்டும் அணியில் எடுத்து இருக்கிறார். இவரின் பவுலிங் மீது நம்பிக்கை வைத்து கோலி இவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

கடந்த வாரமே இவரை பெங்களூருக்கு பிசிசிஐ வர சொல்லி இருந்தது. இவரின் பிட்னசை சோதனை செய்வதற்காக பெங்களூருக்கு வர சொல்லி இருந்தனர். இந்த சோதனையில் வருண் சக்ரவர்த்தி வெற்றிபெற்ற காரணத்தால் தற்போது இந்திய அணிக்கும் தேர்வாகி இருக்கிறார்.

சிறப்பு

சிறப்பு

இந்திய அணியில் ஏற்கனவே வாஷிங்க்டன் சுந்தர், நடராஜன் ஆகிய வீரர்கள் உள்ளனர். தற்போது இன்னொரு ஹைலைட்டாக வருண் சக்கரவர்த்தியும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் ஆடும் அணியில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது .

Story first published: Monday, February 22, 2021, 8:37 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+