இந்திய அணியை சரிய வைத்த 6'8" - டாப் முதல் லோ ஆர்டர் வரை காலி.. எதிர்பாரா ஆப்பு
சவுத்தாம்ப்டன்: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பெரிதாக இவரை கண்டுகொள்ளவில்லை என்று தான் தெரிகிறது. யார் அவர்? கைல் ஜேமிசன்.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
மழை காரணமாக ஜூன்.18ம் தேதி தொடங்க வேண்டிய போட்டி, ஜூன் 19ம் தேதி தான் துவங்கியது. ஆனால், ஒருநாள் கூட முழுமையாக போட்டி நடைபெறவில்லை. இன்றைய நான்காம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 விக்கெட்டுகள்
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், விராட் கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு, தங்கள் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் விளாசிய டெவோன் கான்வே 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, டாம் லாதம் 30 ரன்களில் வெளியேறினார். இந்தியா சார்பில், அஷ்வின், இஷாந்த் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

மூன்று ஆர்டரும் காலி
இதில் இந்திய அணியின் பக்கம் சில சிக்கல்கள் இருந்தாலும், அதில் மிக முக்கியமானது கைல் ஜேமிசனை சரியாக டீல் செய்யாமல்விட்டது தான். இந்த 6 அடி எட்டு அங்குலம் உயரம் உள்ள பவுலரிடம் தனது 5 விக்கெட்டுகளை தாரை வார்த்தது இந்தியா. அதிலும், அணியின் மூன்று பேட்டிங் ஆர்டரின் முக்கிய மூன்று தலைகளை ஜேமிசன் காலி செய்திருக்கிறார். டாப் ஆர்டரில் ரோஹித், மிடில் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி, லோ ஆர்டரில் ரிஷப் பண்ட் என அணியின் பேட்டிங் ஆழத்தை சீர்குலைத்திருக்கிறார். இந்திய அணி 217 ரன்களில் சரணடைந்ததற்கு இந்த மூன்று விக்கெட்டுகள் தான் முக்கிய காரணம். இவர்களில் ஒருவரை நிற்க விட்டிருந்தால் கூட அணி ஸ்கோர் 350-ஐ கிராஸ் செய்திருக்கும்.

இத்தனை சேதம்
இப்படி ஏகத்துக்கும் இந்தியாவை சோதித்திருக்கும் கைல் ஜேமிசன் பந்துகளில் சில மோசமான ஷார்ட்ஸ்களை விராட் கோலி கூட முயற்சி செய்தது, அவரை எந்தளவு இந்திய அணி குறைத்து மதிப்பிட்டுவிட்டது என்பதைத் தான் காட்டுகிறது. ஆனால், கோலியே பேடில் பந்தை வாங்க வைத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அந்த அல்மோஸ்ட் 7 அடி பவுலர். போல்ட் ஓவரை மிக கவனமாக கையாண்ட அக்கறையில் ஒரு 30 பெர்சென்ட் இவர் ஓவரில் காட்டியிருந்தாலும், இத்தனை சேதம் வந்திருக்காது.

இந்தியாவுக்கு ஆபத்து
இந்த மழையையும் மீறி ஒருவேளை இந்தியா 2வது இன்னிங்ஸ் ஆடுகிறது என்றால், அப்போதும் அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கப் போவது ஜேமிசன் தான். இதனால், நியூசிலாந்தை 200 ரன்களுக்கு ஆல் அவு செய்வதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை. ஒருவேளை அந்த அணியை 350 ரன்கள் வரை அடிக்கவிட்டால், ரிசர்வ் டே பயன்படுத்தப்படும் பட்சத்தில் இந்தியாவின் தோல்வியை தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம்.


Click it and Unblock the Notifications