Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவுக்கு மாற்றாக முகமது சிராஜ்..ஷமி இருக்கையில் பிசிசிஐ எடுத்த மிகப்பெரும் ரிஸ்க்.. காரணம் என்ன?

மும்பை: ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரரை தேர்வு செய்வதில் பிசிசிஐ பெரும் ரிஸ்க் எடுத்துள்ளதாக தெரிகிறது.

Recommended Video

T20 Worldcupல் இருந்து காயம் காரணமாக விலகிய Bumrah!

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கு தயாராகும் வகையில் தான் தற்போது தென்னாப்பிரிக்க அணியுடன் இந்தியா மோதி வருகிறது.

பும்ராவின் விலகல்

பும்ராவின் விலகல்

தொடர் வெற்றிகளுடன் இந்திய அணி நம்பிக்கையுடன் இருக்கும் சூழலில் தான் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பும்ராவுக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதாகவும், குணமடைய கூடுதல் நாட்கள் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

சிராஜ் மாற்று வீரர்

சிராஜ் மாற்று வீரர்

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரராக முகமது சிராஜ் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவுடனான அடுத்த 2 போட்டிகளுக்கும் அவரே மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே டி20 உலகக்கோப்பையிலும் சிராஜ் தான் பும்ராவுக்கு பதிலாக களமிறங்குவார் எனத் தெரிகிறது. ஆனால் பிசிசிஐ எடுத்த முடிவு சரியானதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்தியாவின் ஸ்டார் பவுலராக இருக்கும் போதிலும் முகமது சிராஜ் வெறும் 5 டி20 போட்டிகளில் தான் இந்தியாவுக்காக ஆடியுள்ளார். இதற்கு காரணம், அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு தான் சிறப்பாக இருப்பார் எனக்கூறி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓரம்கட்டியுள்ளது பிசிசிஐ. இதற்கேற்றார் போலவே இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

 சிராஜ்-ன் பலம்

சிராஜ்-ன் பலம்

முகமது சிராஜ் நல்ல வேகமும், பவுன்ஸும் போடக்கூடிய அனுபவ வீரர். அவரின் இந்த வேகம் ஆஸ்திரேலியா போன்ற களங்களில் எடுபடும் என்ற காரணத்தினால் பிசிசிஐ இந்த முடிவு எடுத்துள்ளது. ஆனால் இதிலே ஆபத்தும் உள்ளது. டி20 கிரிக்கெட்டில் சிராஜ் விக்கெட்களை எடுக்கும் அதே நேரத்தில் ரன்களையும் வாரி வழங்குகிறார். அவரின் எகானமி ரேட் 10.45 ரன்கள் ஆகும்.

ரிஸ்க்கான முடிவு

ரிஸ்க்கான முடிவு

இதுமட்டுமல்லாமல் முகமது சிராஜ் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையுடனான டி20 கிரிக்கெட்டில் விளையாடினார். அதன்பின்னர் எந்தவொரு டி20 கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. இப்படி இருக்கையில் அவரை நேரடியாக டி20 உலகக்கோப்பைக்கு கொண்டு செல்வது ரிஸ்க் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Story first published: Thursday, September 29, 2022, 20:48 [IST]
Other articles published on Sep 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+