
முன்னதாக தயாரான மும்பை அணி
ஊரெங்கும் கொரோனா அச்சுறுத்தல்.. இந்தியாவிலும் அதிகளவில் கொரோனா பாதிப்புகள். பிசிசிஐக்கு அதிகளவில் நிதியை பெற்றுதந்துவந்த ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற அச்சம் ஐபிஎல் அணிகள் அனைத்திலும் இருந்தது. ஆனாலும் நடந்தாலும் நடக்காவிட்டாலும் நாம் தயாராக இருப்போம் என்ற உறுதி இருந்தது மும்பை அணியிடம்.

சிறப்பான திட்டமிடல்
கடந்த ஜூன் மாதத்திலிருந்தே தங்களது திட்டப்பணிகளை துவக்கிவிட்டனர் மும்பை அணி நிர்வாகத்தினர். 5 மாதங்கள் கொரோனாவால் வீட்டிற்குள் அடங்கியிருந்த வீரர்களை பயிற்சிகளுக்காக வெளியில் கொண்டு வந்தனர். நவி மும்பையில் ஹோட்டல் ஒன்றின் ஒரு பகுதி முழுமையாக வீரர்களுக்காக தயாராக இருந்தது. ஜியோ மைதானமும் தயாரானது.

பயிற்சி முகாம்கள்
வீரர்கள் தங்களது குவாரன்டைனை முடித்துக் கொண்டு பயிற்சி முகாம்களில் பங்கேற்றனர். இது நடந்தது ஜூலை மாதத்தில் . அப்போது ஐபிஎல் பற்றிய அறிவிப்புகூட வெளியிடப்படவில்லை. ஆயினும் அப்போதே தங்களது வீரர்களை தயார் படுத்திக் கொண்டிருந்தது மும்பை அணி. பும்ரா, ரோகித் உள்ளிட்டவர்களும்கூட இந்த பயிற்சிகளில் பங்கேற்றனர்.

தயார்நிலையில் இன்டோர் மைதானங்கள்
முன்னதாக கோவிட் 19 டெஸ்ட்களும் எடுக்கப்பட்டு பின்பே வீரர்கள் நெட் பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் திட்டமிட்டு காய் நகர்த்தியது மும்பை அணி. மழைக்காலத்தையும் கவனத்தில் கொண்டு, இன்டோர் மைதானங்களும் தயார் நிலையில் இருந்தன.

முழுமூச்சில் பயிற்சிகள்
ஜூலை மாதத்தின் மத்தியில் அந்த அணியின் ஒவ்வொரு வீரர்களும் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மும்பைக்கு பறந்து வந்தனர். முழுமூச்சில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும் 2 வாரங்கள் குவாரன்டைனிலும் எந்தவிதமான சலுகைகளும் இன்றி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.

சிறப்பான வசதிகள்
இதையடுத்து ஆகஸ்ட்டில் அபுதாபிக்கு வந்தது மும்பை அணி. அங்கும் அணியினருக்காக ஒரு ஹோட்டல் புக் செய்யப்பட்டிருந்தது. அங்கு நீச்சல், ஜிம் போன்றவற்றை செய்வதற்கு வசதிகள் இருந்தன. எதற்காகவும் வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

வலைப்பயிற்சிகள் தீவிரம்
கொரோனாவை அடுத்து இரண்டு பேருந்துகள் வீரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதை கொண்டு துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவிற்கு சென்றுவர முடிந்தது. அங்கும் குவாரன்டைனை முடித்துக் கொண்டு வலை பயிற்சிகளில் சிறப்பாக ஈடுபட்டனர் மும்பை வீரர்கள்.

அணியில் வெளிநாட்டு வீரர்கள்
மேலும் சிபிஎல்லை முடித்துக் கொண்டு, பொல்லார்ட், ரூதர்போர்ட் உள்ளிட்ட வீரர்களும் முன்னதாக டீ காக், நாதன் உள்ளிட்ட வீரர்களும் ஐபிஎல்லிற்காக யூஏஇ வருவதற்கும் முறையான திட்டமிடல் இருந்தது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த முறை நெட் பயிற்சிகளுக்கு மிகவும் அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

குடும்பத்தினருடன் கொண்டாட்டம்
மேலும் தொடருக்கு முன்பும், தொடரின்போதும், அடிக்கடி கொண்டாட்டங்களையும் குறைவில்லாமல் செய்திருந்தது மும்பை நிர்வாகம். மேற்குறிப்பிட்ட இத்தகைய சிறப்பான திட்டமிடல் போன்றவற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தனர். மன நெருக்கடி போன்றவை இல்லாமல் அவர்களால் போட்டிகளை எதிர்கொளள்வும் இவை காரணமாக இருந்தன.


Click it and Unblock the Notifications