Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாராலும் அசைக்க முடியாத ஹைதராபாத்.. தூக்கி சாப்பிட்ட பஞ்சாப்.. கேப்டன் அஸ்வினின் சூப்பர் பிளான்!

Recommended Video

பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் முதல் தோல்வியை சந்தித்த ஹைதராபாத் அணி

மொஹாலி: நேற்று பஞ்சாப்பிற்கும் ஹைதராபாத்திற்கும் இடையில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணி எளிதாக வெற்றிபெற்று இருக்கிறது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. கெயில் அதிரடியாக 63 பந்தில் 104 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் 3 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.

அதன்பின் களமிறங்கிய ஹைதராபாத் அதிரடியாக ஆடியது. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. ஹைதராபாத் 20 ஓவரில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தநிலையில் ஹைதராபாத்தை வீழ்த்தி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. இதில் அஸ்வினின் சில வியூகங்கள் வெற்றிக்கு வழியமைத்து கொடுத்தது.

ஒரு போட்டி கூட தோற்கவில்லை

ஒரு போட்டி கூட தோற்கவில்லை

இந்த தொடரில் நேற்றைய போட்டிக்கு முன்பு ஹைதராபாத் அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவே இல்லை. வரிசையாக மூன்று போட்டியில் விளையாடி அந்த அணி எளிதாக வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சனின் வித்தியாமான கேப்டன்சி அந்த அணிக்கு பெரிய பலமாக இருந்ததால், எளிதாக வெற்றியை நோக்கி முன்னேறியது.

சிறந்த பவுலிங் ஆர்டர்

சிறந்த பவுலிங் ஆர்டர்

இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிதான் சிறந்த பவுலிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது. ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், ஷாஹிப் அல் ஹாசன், தீபக் ஹூடா, சித்தார்த் கவுல் ஆகியோர் மொத்தமாக எதிரணியை மிரட்டி வருகிறார்கள். கோஹ்லி தொடங்கி எல்லோரையும் அந்த அணி மிரட்டி வருகிறது.

அஸ்வினின் திட்டம்

அஸ்வினின் திட்டம்

ஆனாலும் இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று இருக்கிறது. ஹைதராபாத் அணி முதல்முறையாக பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது. இதற்கு அஸ்வின் டாஸ் வென்று முதல்முதலாக பேட்டிங் தேர்வு செய்ததும் ஒரு காரணம். இந்த ஐபிஎல் தொடரில் டாஸ் வென்ற அணி ஒன்று முதலில் பேட்டிங் தேர்வு செய்வது இதுவே முதல்முறையாகும்.

வலுவாக இலக்கு நிர்ணயம்

வலுவாக இலக்கு நிர்ணயம்

ஹைதராபாத் அணிக்கு பேட்டிங் ஆர்டர் சரியாக இல்லை. இதனால் அந்த அணி கடைசி நேரத்தில் இலக்கை அடைவது கஷ்டம். இதனால் மிக அதிகமான இலக்கை வைக்க பஞ்சாப் அணி முதலிலேயே திட்டமிட்டது. இதனால் அதிரடியாக ஆடி, விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக ஆடி போக போக அதிரடி காட்டியது. நேற்று நடந்த போட்டியில் கெயில் கூட பொறுமையாக தொடக்கத்தில் ஆடினார்.

Story first published: Friday, April 20, 2018, 15:01 [IST]
Other articles published on Apr 20, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+