Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்சர் மன்னன் ரோகித் சர்மா! ஒவ்வொரு பிறந்தநாளிலும், அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் எந்த இடம்?

மும்பை : கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு ரோகித் சர்மா ஒரு நல்ல உதாரணம். ஏழ்மை குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தன்னுடைய கடும் உழைப்பால் இந்திய கிரிக்கெட்டில் இளம் வயதிலேயே இடம் பிடித்து டி20 உலக கோப்பையை வென்றவர் ரோகித் சர்மா.

ஆனால் கடும் போட்டி காரணம் மற்றும் பார்ம் அவுட் காரணமாக ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது. இதனால் 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு கிடைக்கவில்லை.

How Rohit sharma raises in to No 1 in most sixers hit list

எனினும் தன்னுடைய தோல்விகளை மறந்து விட்டு அதிலிருந்து கடுமையாக உழைத்து வெற்றி பெற்று தற்போது உலகின் முன்னணி வீரராக ரோஹித் சர்மா இருக்கின்றார். இந்த நிலையில் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா எந்த இடத்தை பிடித்திருக்கிறார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ரோகித் சர்மா தன்னுடைய 21 வது வயதில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 523 வது இடத்தில் இருந்தார். 22 ஆவது பிறந்த நாளில் 394 வது இடத்திற்கு முன்னேறினார். 23 வது பிறந்த நாளில் 347 வது இடத்தில் இருந்த அவர் 24 வது வயதில் 196 வது இடத்திற்கு உயர்ந்தார். 25 ஆவது வயதில் 147 வது இடத்திலும் 26 ஆவது வயதில் 146 ஆவது இடத்திலும் இருந்த ரோகித் சர்மா 27 வது வயதில் அதிரடியாக விளையாடி சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 63வது இடத்தை பிடித்தார்.

28 வது வயதில் 48 வது இடத்திற்கு முன்னேறிய ரோகித் சர்மா 29 வது வயதில் 29 வது இடத்தில் இருந்தார். முப்பதாவது வயதில் 23 வது இடத்தில் இருந்த ரோகித் சர்மா, தன்னுடைய 31 வது வயதில் டாப் 10க்குள் நுழைந்து ஏழாவது இடத்தை பிடித்தார். 32 வது வயது அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த ரோகித் சர்மா 33 வது வயதில் டாப் மூன்றாவது வீரராக இடம் பிடித்தார்.

33 முதல் 35 வரை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்த ரோகித் சர்மா, 36 வது வயதில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் 37 வது வயதில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கின்றார். இந்த பட்டியலை பார்க்கும்போது உழைப்பு மற்றும் கடின முயற்சி வாழ்க்கையில் எந்த அளவுக்கு உயரத்தை கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Story first published: Tuesday, April 30, 2024, 13:35 [IST]
Other articles published on Apr 30, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+