Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜடேஜாவை "கண்டுபிடித்து செதுக்கிய" வார்னே.. ஒரு பிளாஷ் பேக்!

சென்னை: தன்னை 2007 ஆம் ஆண்டு அன்டர் 19 பிளேயராக ஆடும்போதே கண்டுபிடித்து சிறந்த வீரராக வருவார் என்று அறிவித்து தயார் செய்த குருநாதர் ஷேன் வார்னே மறைந்த நிலையில் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக 100 ரன்களை அடித்தி நிருபித்ததன் மூலம் ஷேன் வார்னேயின் கணிப்பு துல்லியமானது என சீடர் ஜடேஜா நிருபித்துள்ளார்.

Recommended Video

Warne's Rockstar Jadeja Hits Ton against Sri Lanka | IND vs SL 1st Test | OneIndia Tamil
 ஜடேஜாவுக்கு துணை நின்ற ஷேன் வார்னே

ஜடேஜாவுக்கு துணை நின்ற ஷேன் வார்னே

இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட் போட்டியில் 100 ரன்களை கடந்து ஆடிக் கொண்டிருக்கிறார் ரவீந்திர ஜடேஜா. இந்திய அணியில் ஜடேஜாவை எடுத்தபோது சிஎஸ்கே கோட்டா என கிண்டலடித்தார்கள். துண்டு துக்கடான்னு (bits and pieces) ஒரு புகழ்பெற்ற வீரர் விமர்சித்தார். அப்போதும் ஜடேஜாவுக்கு ஆதரவாக கருத்துச் சொன்னவர் ஷேன் வார்னே. ஜடேஜா குறித்த ஷேன் வார்னேயின் கணிப்பை உண்மையாக்கி, எதிராளிகளின் கணிப்பை பொய்யாக்கி, இந்திய அணியின் முக்கிய தேவை என்பதை உணர்த்தும் வகையில் ஜடேஜா ஆடி வருகிறார்.

 52 வயதில் அகால மரணம்...அதிர்ச்சியில் ரசிகர்கள்

52 வயதில் அகால மரணம்...அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று மாலை திடீரென மாரடைப்பால் காலமானார். 52 வயதில் அவரது அகால மரணம் கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலிய ரசிகர்களை தாண்டி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்து உலகின் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர், உலகில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்கிற பெருமைக்கு உரியவர் வார்னே.

 அது என்ன பந்து அவர் சொல்படியெல்லாம் கேட்டதே

அது என்ன பந்து அவர் சொல்படியெல்லாம் கேட்டதே

மைதானத்தில் சுழற்பந்து வீச்சில் அவர் செய்த ஜாலம் இன்றும் சமூக வலைதளங்களிலும், யூடியூபிலும் லட்சக்கணக்கானவர்களால் பார்த்து ரசிக்கப்படுகிறது. சாதாரணமாக விக்கெட்டை நோக்கி செல்லும் பந்து கணித்து ஆடப்படும், ஆனால் ஷேன் வார்னே போடும் பந்து எங்கே பிச் ஆகிறது எங்கே திரும்புகிறது, எங்கே ஸ்டெம்பை தாக்குகிறது என்பது யாருமே அறியாத மாயாஜாலம். இந்த மாயாஜாலத்தில் சிக்கி விக்கெட்டுகளை இழந்த முன்னணி பேட்ஸ்மேன்கள் நூற்றுக்கணக்கில் உண்டு.

 ஜாம்பாவன்களை தடுமாற வைத்த பந்துவீச்சு

ஜாம்பாவன்களை தடுமாற வைத்த பந்துவீச்சு

இங்கிலாந்தின் புகழ்பெற்ற பேட்ஸ் மேன் மை கேட்டிங்க்குக்கு ஒரு தடவை ஷேன் வார்னே பந்து வீசினார் அந்த பந்து மை கேட்டிற்கு இடதுபுறம் உள்ள லெக் சைடில் பிட்சானது. கேட்டிங் மிக சாதாரணமாக அந்த பந்தை எதிர்கொள்ள முன்னேறியபோது அது பிச் ஆகி ஆப்சைட் நோக்கி வந்து ஸ்டெம்பை தட்டி விட்டு சென்றுவிட்டது. தான் எப்படி அவுட் ஆனோம் என்பதை கேட்டிங்கால் நம்பவே முடியவில்லை. அதிசயத்துடன் நின்று பார்த்து பார்த்து, ஷேன் வார்னை ஆச்சர்யத்துடன் திரும்பித் திரும்பிப் பார்த்து தலையை ஆட்டிக்கொண்டே கேட் வெளியில் சென்றார்.

 பந்துவீச்சில் ஜாலம் ஷேன் வார்னேயின் வழக்கம்

பந்துவீச்சில் ஜாலம் ஷேன் வார்னேயின் வழக்கம்

இன்னும் பலர் ஸ்வீப் ஷாட் ஆடும் போது அவர்களைத் தாண்டி அவர்களுக்குப் பின்னால் பந்து பிச் ஆகி போல்ட் ஆக்கிய சுவாரஸ்ய விஷயங்கள் எல்லாம் நடந்துள்ளது. ஷேன் வார்னே 1992 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அவருடைய கேரியரில் முதல் விக்கெட் நம்முடைய ரவிசாஸ்திரிதான். அவர் சிறந்த பந்துவீச்சாளர் மட்டுமல்ல பல இளம் வீரர்களை கண்டுபிடித்தவரும் கூட இந்தியாவின் முன்னணி ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜாவை அவரது இளம் வயதிலேயே இவர் சிறந்த வீரராக வருவார் என்று கண்டறிந்து சொன்னவர் வார்னே.

ஜடேஜாவை கண்டுபிடித்த ஷேன் வார்னே

ஜடேஜாவை கண்டுபிடித்த ஷேன் வார்னே

2007 ஆம் ஆண்டு அண்டர் 19 அணியில் ஆடிய ஜடேஜாவின் ஆட்டத்தைக் பார்த்து முதன் முதலில் அவர் திறமைசாலி என்று கண்டறிந்தார் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே. இவர் நன்றாக வருவார் என கணித்தவர் அவர். அதுமட்டுமல்ல ரவீந்திர ஜடேஜாவுக்கு பல ஆலோசனைகள் சொல்லி ஐபிஎல் மேட்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அவர் கேப்டனாக வந்தபோது ஜடேஜாவை எடுத்து அவரை தயார்படுத்தினார். முதல் ஐபிஎல்லை வென்ற கேப்டன் என்கிற பெருமையும் ஷேன்வார்னேக்கு உண்டு. அப்போது அவரது அணியில் ஆடியவர் ஜடேஜா. ஜடேஜாவை ஷேப் செய்ததில் பெரும் பங்கு ஷேன் வார்னேக்கு உண்டு.

 ஷேன் வார்னே கணிப்பை உறுதிப்படுத்திய சிஷ்யன் ஜடேஜா

ஷேன் வார்னே கணிப்பை உறுதிப்படுத்திய சிஷ்யன் ஜடேஜா

இன்று இலங்கை டெஸ்ட் போட்டியின் போது ஜடேஜா 100 ரன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய மென்டார் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த சதம் அமைந்துள்ளது. குருவுக்கு சிஷ்யனின் காணிக்கையாக ஒரு இளம் வீரரைக் கண்டறிந்து நன்றாக வருவார் என்று அன்றே கணித்த ஷேன் வார்னே தன் கணிப்பு பொய்யில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஜடேஜாவின் ஆட்டம் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

Story first published: Saturday, March 5, 2022, 18:40 [IST]
Other articles published on Mar 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+