Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவனத்தை திசைதிருப்பிய ஸ்மித்.. சைக்கிள் கேப்பில் டிராவிஸ் ஹெட் அரைசதம்.. பும்ரா இருந்திருக்கனும்!

லண்டன்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் தீவிரமாக முயற்சித்து வந்த நிலையில், மறுமுனையில் வேகமாக ரன்கள் சேர்த்த டிராவிஸ் ஹெட் 60 பந்துகளில் அரைசதம் விளாசி ஆச்சரியமளித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடி வரும் ஆஸ்திரேலியா அணி உணவு இடைவேளையின் போது 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்திருந்தது. இதையடுத்து லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித் கூட்டணி பேட்டிங்கை தொடங்கியது. ஆனால் ஷமி வீசிய மிரட்டலான பந்தில் லபுஷேன் 26 பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

How Steve Smith helps Travis Head to score a half century against India in the WTC Final 2023

இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் உடன் டிராவிஸ் ஹெட் சேர்ந்தார். லபுஷேனை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் தீவிரமாக இருந்தனர். குறிப்பாக ஷமியின் ஸ்விங் பந்துகள் ஸ்டீவ் ஸ்மித்தையே ஆச்சரியப்படுத்தியது. இவர்கள் இருவருக்கும் இடையிலான ஆட்டமே ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் அமைந்தது. ஆனால் வழக்கம் போல் ஸ்டீவ் ஸ்மித் வீடியோ கேம் ஆட்டம் ஆடி பந்துகளை எளிதாக கடந்தார்.

இதனிடையே டிராவிஸ் ஹெட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி வேகமாக ஸ்கோரை உயர்த்தினார். ஸ்டீவ் ஸ்மித் மீதான அதிக கவனத்தை குவித்ததால், டிராவிஸ் ஹெட்டின் அதிரடி ஆட்டத்தை சில நிமிடங்களுக்கு பின்னரே இந்திய அணி கவனித்து செயல்பட்டது. ஆனால் அதற்குள் டிராவிஸ் ஹெட் போதுமான சேதாரத்தை விளைவித்தார்.

இவரின் அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்களிலேயே 150 ரன்களை கடந்தது. இவர் ரன்கள் குவிக்க ஸ்டீவ் ஸ்மித் மறுமுனையில் பந்துவீச்சாளர்களின் கவனத்தை எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சிதறடித்தார். இதனால் டிராவிஸ் ஹெட் அதிகளவில் பவுண்டரிகளை விளாசினார். இதன் காரணமாக 60 பந்துகளிலேயே டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் 75 பந்துகளில் 60 ரன்களுடனும், ஸ்டீவ் ஸ்மித் 102 பந்துகளில் 33 ரன்களுடன் களத்தில் உள்ளனர். கடைசி செஷனில் அதிக ரன்கள் விளாச வாய்ப்பு இருப்பதால், இந்திய பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல தவிப்பதால், பும்ரா அணியில் இருந்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

Story first published: Wednesday, June 7, 2023, 20:15 [IST]
Other articles published on Jun 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+