Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"WTC Finalல் உன்னை தூக்குவேன்".. ரோஹித்துக்கு ஓப்பன் சேலஞ் விடுத்த போல்ட் - எகிறும் எதிர்பார்ப்பு

சவுத்தாம்ப்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. அதில், இந்த குறிப்பிட்ட சவால் உஷ்ணத்தை கூட்டியிருக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியில் நாளை (ஜூன்.18) நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

சவுத்தாம்ப்டனில் இப்போட்டி நடைபெறுகிறது. முதன்முறை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷி தொடர் என்பதால், இத்தொடர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம், வீரர்களுக்கு இடையேயான நெக் டூ நெக் மோதலும் இப்போட்டியில் இருப்பது ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும்.

ரோஹித் vs போல்ட்

ரோஹித் vs போல்ட்

விராட் கோலி vs கேன் வில்லியம்சன், பும்ரா vs போல்ட், ரோஹித் vs போல்ட், நியூசிலாந்து ஸ்பின்னர்ஸ் vs ரிஷப் பண்ட், ஜடேஜா vs நியூசிலாந்து லோ ஆர்டர் பேட்ஸ்மேன்ஸ் என்று ஏகப்பட்ட மோதல்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கின்றன. இதில் குறிப்பாக, ரோஹித் vs போல்ட் மோதல் செம ஹாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஷேன் பாண்ட் ஷேரிங்ஸ்

ஷேன் பாண்ட் ஷேரிங்ஸ்

ரோஹித் ஷர்மா, டிரெண்ட் போல்ட் ஆகிய இருவருமே மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள். இன்னும் சொல்லப்போனால் மும்பை அணியில் போல்ட்டின் கேப்டன் ரோஹித். இருவருக்குள்ளும் எப்போதும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால், இப்போது நேருக்கு நேர் மோதப் போகிறார்கள். இதுகுறித்து மும்பை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளரும், நியூசிலாந்தின் முன்னாள் அதிவேக பந்துவீச்சாளருமான ஷேன் பாண்ட் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பல மாதங்களுக்கு முன்பே

பல மாதங்களுக்கு முன்பே

ரோஹித் - போல்ட் குறித்து கூறிய பாண்ட், "ஐபிஎல் சீசனில் பயிற்சியின் போது, ட்ரெண்ட் போல்ட் பவுலிங் செய்கையில், பல பந்துகள் ரோஹித்தின் பேடில் பட்டது. அப்போது, 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இப்படித்தான் நடக்கும்; என்று ரோஹித்திடம் போல்ட் கூறினார். அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் குறித்து பல மாதங்களுக்கு முன்பே பேசிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் ஒருவருக்கொருவர் எதிராக மோதப்போகிறோம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

பெரும் அழுத்தம்

பெரும் அழுத்தம்

நான் ஒரு வீரராக ரோஹித் ஷர்மாவை நேசிக்கிறேன், அவரை கிட்டத்தட்ட ஒரு மாத்யூ ஹைடன் வகையான வீரராக பார்க்கிறேன். கடினமான சூழ்நிலைகளில் களமிறங்கி அணிக்கு பலம் சேர்க்கிறார். அவர் வேகமாக ரன்களை சேகரிக்கிறார். அது உடனடியாக பந்து வீச்சாளருக்கு பெரும் அழுத்தம் கொடுக்கிறது. போல்ட் Vs ஷர்மா மோதலை காண எனக்கு ஆர்வம் தாங்கவில்லை" என்று ஷேன் பாண்ட் கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இருவரின் மோதல் குறித்து சமூக தளங்களில் மீம்ஸ்களை பதிவிட்டு வருவதோடு மட்டுமல்லாமல், இருவரில் ஆதிக்கம் செலுத்தப்போவது போல்ட் தான் என்றும் கூறி வருகின்றனர்.

Story first published: Thursday, June 17, 2021, 14:00 [IST]
Other articles published on Jun 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+