Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் 2 விஷயங்கள் செய்தால் போதும்.. 3வது டெஸ்டில் இந்தியா கம்பேக் தர என்ன செய்யனும்.. முழு விவரம்

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சரிவில் சிக்கியுள்ள இந்திய அணி, மீண்டு வர வேண்டும் என்றால் 2 விஷயங்களை செய்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அண் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் ரோகித் எதிர்பார்த்தை போல எதுவுமே நடக்கவில்லை.

முதல் 2 நாட்களுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் வெறும் 109 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதுதான் பிரச்சினை என்றால் பவுலிங்கில் படு மோசம்.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

இந்தூர் பிட்ச்-ல் சிகப்பு மண் உள்ளதால் முதல் 2 நாட்களுக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும், பேட்ஸ்மேன்கள் கவனித்து ஆடினால் நல்ல ஸ்கோர் எடுக்கலாம் எனக்கூறினர். ஆனால் முதல் 2 போட்டிகளில் இல்லாத வகையில் ஸ்பின்னருக்கு உதவியது. சராசரியாக 4.8 டிகிரி அளவிற்கு பந்து டேர்ன் ஆனதால் இந்திய பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

 ஆஸி,யின் இன்னிங்ஸ்

ஆஸி,யின் இன்னிங்ஸ்

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதானமாக ரன் சேர்த்து வருகிறது. அந்த அணியில் உஸ்மான் கவாஜா 60 ரன்களும், லபுசாக்னே 31 ரன்களும் அடிக்க முதல் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்களை குவித்துள்ளது. தற்போது வரை இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.

எப்படி தப்பிக்கலாம்?

எப்படி தப்பிக்கலாம்?

இந்நிலையில் இந்த சரிவில் இருந்து மீள வேண்டும் என்றால் இந்தியா 2 விஷயங்களை செய்ய வேண்டும். இந்தியா பேட்டிங் செய்த போது இருந்ததை விட, ஆஸ்திரேலிய இன்னிங்ஸில் டேர்ன் குறைந்துவிட்டது. நேரம் போக போக குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அதிகப்படியான டேர்ன்கள் உள்ளன. இது இந்தியாவுக்கு நல்லதல்ல. ஏனென்றால் பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்திவிடுவார்கள். எனவே நாளை காலை அடிக்கும் வெயிலால் பிட்ச்-ல் மீண்டும் டேர்ன்கள் அதிகரிக்கும். இதனை இந்திய பவுலர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

காலை நேர செஷன்

காலை நேர செஷன்

அதாவது தற்போது ஆஸ்திரேலிய 47 ரன்கள் தான் முன்னிலையில் உள்ளனர். எனவே நாளை காலை நேரத்தில் இருக்கும் டேர்னை பயன்படுத்தி அனைத்து விக்கெட்களையும் எடுத்துவிட வேண்டும். 100 முதல் 130 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியாவை சுருட்டிவிட்டால், மதியத்திற்குள் இந்தியா பேட்டிங்கிற்கு வந்துவிடும். அப்போது இன்றைய நாளை போலவே மதிய நேரத்தில் டேர்ன் குறைந்து பேட்ஸ்மேன்கள் நன்கு ரன் அடிக்கலாம்.

இருவரின் இன்னிங்ஸ்

இருவரின் இன்னிங்ஸ்

ஆட்டத்தின் 3வது மற்றும் 4வது நாட்களில் அதிக ஸ்பின் ஏற்படும். எனவே நாளைய ஆட்டத்தில் யாரேனும் இரண்டு வீரர்கள் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாட வேண்டும். குறிப்பாக விராட் கோலி இன்று ஓரளவிற்கு செட்டிலாகி விளையாடினார். எனவே அவர் களத்தை புரிந்துக்கொண்டு ஒரு பெரிய இன்னிங்ஸ் அடித்தால் 350 ரன்களையாவது இலக்காக வைக்கலாம்.

Story first published: Wednesday, March 1, 2023, 18:25 [IST]
Other articles published on Mar 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+