அடடே.. எல்லோரும் இனி கீரிப்புள்ளை தலையான்னு கூப்பிடுவாங்களே டோணி...!
ராஞ்சி: கேப்டன் டோணி தனது ஹேர்ஸ்டைலை படு ஜில்லாக்ஸ் ஆக மாற்றி விட்டார். நடுவில் கீரிப்புள்ளை மாதிரி முடியை வைத்துக் கொண்டு சைடில் முடியை சிராய்த்து எடுத்து விட்டு புதிய கெட்டப்பில் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நுழைந்துள்ளார் டோணி.
ஆரம்பத்தில் அப்துல் கலாமின் ஜெராக்ஸ் போல காணப்பட்டார் டோணி. ஆனால் அப்துல் கலாமை விட சற்றே நீளமான முடியுடன் .. ப்ரீஸி தலையுடன் விக்கெட் கீப்பராக வெளுத்துக் கட்டி வந்தார்.
திடீரென அவரைத் தூக்கி கேப்டன் பதவியில் அமர்த்தியதும் முதலில் முடியைத்தான் அவர் வெட்டினார்.. அதன் பிறகுதான் ரன் குவிப்பில் களை கட்டினார். அதன் பிறகுதான் டோணி தலையில் எத்தனை மாற்றம்.. அவரது தலைமையில் இந்திய அணியில் எண்ணற்ற மாற்றம்.. வாங்க டோணி தலையில் ஒரு ரவுண்டு போய் வருவோம்..

தலை முதல் தோள் வரை
ஆரம்பத்தில் தலையில் தொடங்கிய முடியை தோள்பட்டை வரை விட்டு அலை பாயுதே கண்ணா என் மனம் அலைபாயுதே என்று இளம் பெண்களை கிறங்கடித்தார் டோணி.

கேப்டன்ஸி வந்ததும் டீசன்ஸி...
அதன்பிறகு கேப்டன் பதவிக்கு உயர்ந்தார் டோணி. இதையடுத்து தனது நீளமான சடை முடியை கட் செய்து சம்மர் கட்டுக்கு மாறினார்.

ஸ்பைக் பாண்டி
திடீரென ஒரு ஸ்பைக் வைத்து சில்லிப்பு காட்டினார். ஆனால் இது ரொம்ப நாள் நீடிக்கவில்லை. டக்கென்று ஸ்பைக்கை ஒரு நாள் கட் செய்து விட்டார்.

பாஸ்.. மொட்டை பாஸ்
இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையை இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்ததும் தடாலடியாக மொட்டை போட்டுக் கொண்டார். அடித்த மொட்டையுடன் கோப்பையைக் கையில் பிடித்தபடி கட்ட்டம் போட்ட சூட்டுடன் அவர் கொடுத்த போஸ் இன்னும் சூடாக மக்கள் மனதில் அப்படியே இருக்கிறது.

இப்ப செந்தில் ஸ்டைல்
இந்த நிலையில் இப்போது திடீரென நம்ம ஊர் செந்தில் ஸ்டைலுக்கு மாறியுள்ளார் டோணி. அதாவது கீரிப்புள்ள ஹேர்ஸ்டைலுக்கு...

கவுண்டர் கையைக் கடித்த ஹேர்ஸ்டைல்!
வர்றதே ராங்கு.. இதுல சாங்கு வேறயா...என்று ஒரு படத்தில் செந்திலைப் பார்த்து கவுண்டமணி கேட்பார். பிறகு செந்தில் தலையைப் பார்த்து என்னடா இது கீரிப்புள்ளை மாதிரி என்று டகாய்ச்சுவார். அப்படிப்பட்ட ஹேர்ஸ்டைலைத்தான் தற்போது டோணி பிக்கப் செய்துள்ளார்.
ஹேரை விடுங்க டோணி, கப்பைப் பத்திரமாக கொண்டு வந்திருங்க.. இல்லாட்டி உங்க ஹேர்ஸ்டைலால்தான் எல்லாம் போச்சு என்று புலம்ப ஆரம்பிச்சிருவாங்க...


Click it and Unblock the Notifications