லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றில் இந்திய அணி தொடக்க வீரர் சுப்மன் கில் அவுட் ஆனதில் சர்ச்சை வெடித்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதலில் 469 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா 269 ரகளை சேர்த்தது.
இதனை அடுத்து 173 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை அடுத்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர்.
முதல் இன்னிங்க்ஸில் தடுமாறிய இந்திய வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர். குறிப்பாக ரோகித் சர்மா 25 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். இதேபோன்று நட்சத்திர வீரர் கில் இரண்டு பவுண்டர்களை அடித்து 19 பந்தில் 18 ரன்கள் அடித்து இருந்தார்.
அப்போது போலாந்து வீசிய பந்தை கில் பேட்டால் தொட்ட போது பந்து ஸ்லிப்பை நோக்கி சென்றது. அப்போது கேமிரான் கிரீன் அதனை பாய்ந்து ஒற்றை கையில் பிடித்தார். அப்போது பந்து தரையில் பட்டது. இதனால் கில் நகராமல் அங்கே நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து மூன்றாம் நடுவர் உதவியை கள நடுவர்கள் கோரினர்.
அப்போது ரீப்ளேவில் கேமரான் கிரீன் பந்தை பிடிக்கும் போது பந்து தெளிவாக தரையில் பட்டது தெரியவந்தது. ஆனால் மூன்றாம் நடுவர் இதனை பார்க்காமல் சுப்மன் கில் அவுட் ஆகிவிட்டதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கில் விரக்தியுடன் பெவிலியன் நோக்கி சென்றார்.இந்த முடிவால் கடுப்பான ரோகித் சர்மா நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து பார்வையாளர்கள் cheater, cheater என ஆங்கிலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை பார்த்து கத்தினார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்த ரவி சாஸ்திரி மற்றும் சங்கக்காரவும் பந்து கேட்ச் பிடிக்கப்பட்டாலும் தரையில் அது தெளிவாக பட்டது என்றும் இதற்கு அவுட்டு கொடுத்தது தவறான முடிவு என்றும் தெரிவித்திருக்கிறார்கள். நிறவெறி காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இந்த முடிவை மூன்றாம் நடுவர் ரிச்சர்ட் கெட்டல்ப்ரோக் அறிவித்து விட்டார் என்று இந்திய அணி ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.