For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி சதம் அடிப்பதற்காக சிங்கிள் ஓட மறுப்பதா? சுயநலத்தின் உச்சம்.. ஜடேஜா மீதும் புகார்

தர்மசாலா : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி ஜடேஜா ஜோடி சிங்கிள் ஓடாமல் பந்துகளை வீணடித்தது பொதுவான ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உலக கோப்பையில் ரன் ரேட் என்பது மிகவும் முக்கியம். நன்றி தான் நாம் எந்த இடத்தில் இருக்கப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கும். இந்த நிலையில் ஒரு பந்துகள் முன்பாகவே வெற்றியை எட்டினாலும் அது ரன் ரேட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Huge controversy arises virat kohli and jadeja played for personal milestone

இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. அப்போது ரோகித் சர்மா 46 ரன்கள், கில்26 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களும், கேஎல் ராகுல் 27 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 191 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தடுமாறியது. அப்போது விராட் கோலி, ஜடேஜா ஜோடியும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

எனினும் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக ஜடேஜா செய்த செயல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. விராட் கோலி 90 ரன்கள் கடந்த உடன் வெற்றிக்கான இலக்கு ஏழு ரன்கள் இருந்தது. அப்போது ஆட்டத்தின் 47வது ஓவரில் ஜடேஜா கடைசி பந்து எதிர்கொண்டார். ஜடேஜா அந்த பந்தில் பவுண்டரியோ இல்லை சிங்கிளோ எடுத்திருந்தால் இந்தியாவின் வெற்றி இன்னும் விரைவில் கிடைத்திருக்கும்.

ஆனால் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக அவர் ரன்களை ஓடாமல் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார்.இதன் மூலம் இந்தியாவின் வெற்றிக்கும் கோலியின் சதத்திற்கும் ஏழு ரன்கள் தான் இருந்தது. இதன் பிறகு 48வது ஓவர் தொடக்கத்தில் விராட் கோலி இரண்டு ரன்கள் அடித்தார். இரண்டாவது பந்து ரன் எதும் எடுக்கவில்லை. மூன்றாவது ஓவரில் பந்து பவுண்டரிக்கு அருகே சென்றபோதும் விராட் கோலி ரன் ஓடாமல் நின்று விட்டார்.

இது இன்னும் ரசிகர்கள் மத்தியில் வெறுப்படைய செய்தது. எப்படியாவது சச்சின் சாதனையை முறியடித்து விடும் என்பதற்காக விராட் கோலி சதத்தை துரத்துகிறார். அவருக்கு இந்திய அணியின் சக வீரர்களும் துணையாக நிற்கிறார்கள். ஆனால் சதத்தை விட அணியின் வெற்றியும் ரன் ரேட்டும் தான் முக்கியம் என்பதை எந்த ஒரு வீரர்களும் புரிந்து கொள்ளாமல் இருப்பது பொதுவான ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

கடைசியில் விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக 95 ரன்கள் இருந்த போது தூக்கி அடித்து கேட்ச் ஆனார். இதன் மூலம் விராட் கோலியின் சதமும் நிறைவேறவில்லை. இந்திய அணியின் வெற்றியும் தாமதமாகவே கிடைத்திருக்கிறது.அணியின் வெற்றியை விட தனிநபர் சாதனைகள் முக்கியமாக மாறிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

Story first published: Sunday, October 22, 2023, 22:39 [IST]
Other articles published on Oct 22, 2023
English summary
Huge controversy arises virat kohli and jadeja played for personal milestone கோலி சதம் அடிப்பதற்காக சிங்கிள் ஓட மறுப்பதா? சுயநலத்தின் உச்சம்.. ஜடேஜா மீதும் புகார்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+