Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு நிமிசம் இதயமே நின்னுடுச்சி.. பந்துவீசும் போது மடங்கிய பும்ரா கால்.. காயம் ஏற்பட்டதா என அச்சம்

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் பும்ராவுக்கு காயம் ஏற்படும் சூழல் உருவானதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்திய அணி பெரும்பான்மையான போட்டிகளில் தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமே பும்ரா கடந்த ஒரு ஆண்டாக அணியில் இடம்பெறாமல் போனதுதான்.

jasprit bumrah

பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதனால் டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை என கடந்த ஆண்டு நடந்த எந்த தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் தற்போது தான் முழு உடல் தகுதியை எட்டி விளையாடி வருகிறார். இம்முறை ஆசிய கோப்பையோ , உலக கோப்பையோ இந்திய வெல்ல வேண்டும் என்றால் அது பும்ராவின் கையில் தான் இருக்கிறது. ஏனெனில் எதிரணி பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் வேகப்பந்துவீச்சை அடித்து நொறுக்கும் போதெல்லாம் பும்ரா தான் தன்னுடைய சிறப்பான பந்துவீச்சு மூலம் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

இதனால் பும்ராவின் பங்கு மிகப் பெரியதாக இருக்கிறது. பும்ரா முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாகிஸ்தான் எதிராக நேற்று விளையாடிய பும்ரா எந்த இடைவெளியும் இன்றி இலங்கைக்கு எதிரான போட்டியிலும் இன்று விளையாடினார். இது ரசிகர்களுக்கு கலக்கத்தை உண்டாக்குனது. அதற்கு தகுந்தார் போல் இன்று பந்து வீசும் போது திடீரென்று பும்ராவின் கால் மடங்கியது.

இதனை பார்த்ததும் ரோகித் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் அதிர்ச்சிகள் உறைந்தனர். மேலும் பும்ரா தனது காலை பிடித்துக் கொண்டு நடந்தார். இதை கண்டவுடன் இந்திய ரசிகர்களின் இதயம் ஒரு நிமிடம் நின்றது. ஆனால் பும்ரா மீண்டும் நடந்து சென்று அடுத்த பந்தை வீச சென்றார். அப்போதுதான் போன மூச்சு இந்திய ரசிகர்களுக்கு திரும்ப வந்தது. உலகக்கோப்பை முடியும் வரை பும்ரா முழு உடல் தகுதியுடன் விளையாடினால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும்.

Story first published: Tuesday, September 12, 2023, 20:28 [IST]
Other articles published on Sep 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+