வங்தேசத்திற்கு எதிராக இவ்வளவு மோசமா ? ரோகித்தின் பரிதாப ரெக்காட்ஸ்.. குட் நியூஸ் சொன்ன ரோகித் சர்மா
மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை.
இந்த நிலையில் தனது விரலில் ஏற்பட்ட காயத்தின் தன்மை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக ரோகித் சர்மா மும்பை சென்றார்.
இதனால் ரோகித் சர்மாவின் இடத்திற்கு கே எல் ராகுல் வந்தார். தற்போது காயம் குணமடைந்துள்ளதால் தான் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறேன் என்று பிசிசிஐ இடம் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

யார் வெளியே?
இதனை அடுத்து ரோகித் சர்மா நாளை டாக்கா புறப்பட்டு செல்கிறார்.
ரோகித் சர்மா வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடினால் சுப்மான் கில் அவருடைய இடத்தை இலக்க நேரிடும். நியாயமாக கேஎல் ராகுல் தான் அணியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அவர் துணை கேப்டன் என்பதால் இந்திய நிர்வாகம் அப்படி செய்யாது என்பது உலகம் அறிந்த விஷயமே.

காரணம் என்ன?
காயத்திலிருந்து குணமடைந்த ரோகித் சர்மா ஏன் இவ்வளவு விரைவாக அணிக்கு திரும்புகிறார் என்று ரசிகர்கள் யோசித்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் வங்கதேசத்துக்கு எதிராக அவருடைய மோசமான டெஸ்ட் ரெகார்ட் தான். இதுவரை வங்கதேசத்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடி வரும் 33 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார்.

மோசமான ரெக்கார்ட்
இதில் அதிகபட்சமாக அவர் அடித்த ஸ்கோர் 21 மட்டும் தான். இதேபோன்று வங்கதேசம் மண்ணில் ரோகித் சர்மா ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் விளையாடி இருக்கிறார்/ அதில் அவர் 6 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். இதனால் தன்னுடைய மோசமான ரெக்கார்டை மாற்றுவதற்காக ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார். இதனால்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி குறைந்தபட்சம் ஒரு பெரிய சதம் விளாச முடிவெடுத்து இருக்கிறார்.

விமர்சனத்துக்கு பதிலடி
இது ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணம் ரோஹித் சர்மா அடிக்கடி காயம் ஏற்பட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்காமல் போய்விடுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக நடப்பாண்டில் மட்டும் ஏழு கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. இந்த விமர்சனத்தை உடைக்கும் வகையில் காயம் குணமாகிய நிலையில் ஓய்வெடுக்காமல் மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடிவெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications