Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனாவை தள்ளி வச்சுட்டு.. சச்சின் செஞ்ச வேலையை பாருங்க... அதிர்ந்த இன்ஸ்டாகிராம்

மும்பை : கொரோனாவால் நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை கடந்த சில மாதங்களாக இருந்தது. இதற்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் விதிவிலக்கில்லை.

இந்நிலையில் அவர் தற்போது தன்னுடைய குடும்பத்தினருடன் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அங்கு அவர் பாராசெய்லிங்கிலும் ஈடுபட்டு, அந்த வீடியோவை தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிரபல பாடகர் ரிட்விசின் பாடலையும் பின்னால் ஒலிக்க விட்டுள்ளது வீடியோவிற்கு அழகு சேர்த்துள்ளது.

சிறப்பாக கழித்த சச்சின்

சிறப்பாக கழித்த சச்சின்

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரும் விதிவிலக்கில்லை. ஆனால் அவர் தனது லாக்டவுன் காலத்தை சிறப்பாக கழித்தார்.

ரசிகர்களை கவர்ந்த சச்சின்

ரசிகர்களை கவர்ந்த சச்சின்

சமூக வலைதளங்களில் அதிகமாக போஸ்ட்களை போட்டு ரசிகர்களை கவர்ந்தார். சமையல் வீடியோ உள்ளிட்ட அவரது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு லைக்குகள் தெறித்தன. இந்நிலையில் கொரோனாவை தள்ளி வைத்துவிட்டு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சச்சின்.

இன்ஸ்டாகிராமில் வீடியோ

இன்ஸ்டாகிராமில் வீடியோ

எந்த இடத்திற்கு அவர் சுற்றுலா சென்றுள்ளார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் தன்னுடைய மகன் அர்ஜூனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை அள்ளிய சச்சின், தற்போது, தான் பாராசெய்லிங் செய்யும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரபல பாடகர் பாடல்

அந்த வீடியோவில் சிறப்பான முறையில் பாராசெய்லிங் செய்யும் சச்சின் டெண்டுல்கர், குதூகலத்துடன் காணப்படுகிறார். இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவின் பின்னே பிரபல பாடகர் ரிட்விசின் 'ஹம் தோ உத் கயே' என்ற பாடலை ஒலிக்கவிட்டுள்ளார் சச்சின். அந்த பாடல் வீடியோவிற்கு அழகு சேர்த்துள்ளது.

Story first published: Tuesday, December 8, 2020, 10:45 [IST]
Other articles published on Dec 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+