Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடக்க வீரராக வரும் ஹாரி புரூக்.. இன்றாவது ரன் அடிப்பாரா? டாஸ் வென்று மார்க்ரம் பந்துவீச்சு தேர்வு!

ஐதராபாத்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

16வது ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்த்து ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. கடந்த இரு போட்டியில் பஞ்சாப் அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை சிறப்பாக தொடங்கியுள்ளது. மறுபக்கம் ஐதராபாத் அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்து மோசமான தொடங்கியுள்ளது.

Hyderabad Captain Markram won the toss and chose to field against Punjab in IPL 2023

இதனால் சொந்த மண்ணில் ஆடும் இன்றையப் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதேபோல் டாஸ் வென்றால் பேட்டிங்கை தான் தேர்வு செய்யவிருந்ததாக ஷிகர் தவான் தெரிவித்தார். இதனால் இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் கடந்த போட்டியில் காயம் காரணமாக ரிடையர்டு ஹர்ட் முறையில் வெளியேறிய ராஜபக்சே, இந்தப் போட்டியில் சேர்க்கப்படவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐதராபாத் அணி தரப்பில் கிளாஸன் மற்றும் மயங்க் மார்க்கண்டே சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அன்மோல்பிரீத் சிங் மற்றும் அடில் ரஷீத் நீக்கப்பட்டுள்ளனர்.

ஐதராபாத் அணி விவரம்: மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் த்ரிப்பாட்டி, எய்டன் மார்க்ரம், கிளாஸன், வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்க்கண்டே, உம்ரான் மாலிக், நடராஜன்

பஞ்சாப் அணி விவரம்: ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், ஷார்ட், ஜித்தேஷ் சர்மா, ஷாரூக் கான், சாம் கரண், நேதன் எல்லீஸ், மோகித் ராதே, ஹர்பிரீத் பரார், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங்

Story first published: Sunday, April 9, 2023, 19:22 [IST]
Other articles published on Apr 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+