எதிர்பார்த்த அனைத்தும் நிறைவேறும்.. இந்தியா - நியூசிலாந்து முதல் ODI.. பிட்ச்-ல் உள்ள சூப்பர் அம்சம்
ஐதராபாத்: இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பிட்ச்-ஐ ரசிகர்களுக்கு பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியுடனான தொடரை 3 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிகரமாக முடித்த இந்திய அணி, இந்த தொடரிலும் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டுகிறது. இதே போல நியூசிலாந்து அணியும் தனது நம்பர் 1 இடத்தை தக்கவைக்க போராடவுள்ளது.

பிட்ச் நிலைமை
இலங்கை தொடரை போலவே இந்த போட்டிக்கும் பிட்ச்-ல் எந்தவித குறையும் வைக்கவில்லை. போட்டி நடைபெறும் ஐதராபாத் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கம் போன்றது ஆகும். இங்கு பேட்டிங் சராசரியே 270 ரன்கள் வரை அடிக்க முடிகிறது. இதனால் இன்றைய போட்டியிலும் பல சிக்ஸர்கள் பறப்பதை எதிர்பார்க்கலாம். இந்த முறை சூர்யகுமார் யாதவும் அணியில் இருப்பார் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

பவுலிங் விவரங்கள்
பந்துவீச்சை பொறுத்தவரையில் வேகப்பந்துவீச்சுக்கு எடுபடவில்லை என்றாலும், ஸ்பின்னர்களுக்கு ஓரளவிற்கு உதவியாக இருக்கும். இரு அணிகளிடம் இருந்தும் ஸ்லோயர் பந்துகள், பல வேரியஷன்களை மாற்றுவதை எதிர்பார்க்கலாம். குறிப்பாக எதிரணியிலும் இஷ் சௌதி மற்றும் மிட்செல் சாண்ட்னர் போன்ற தலைசிறந்த ஸ்பின்னர்கள் இருப்பதால் இந்திய பேட்டர்களுக்கு சவாலாக இருக்கலாம்.

டாஸில் என்ன செய்யலாம்?
இந்த களத்தில் இதுவரை நடந்துள்ள 6 ஒருநாள் போட்டிகளில் 3 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 3 முறை 2வது பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன. ஆனால் இங்கு டாஸ் வென்றால் பவுலிங் வீசுவதே சரியாக இருக்கும். ஏனென்றால் 2வது இன்னிங்ஸில் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் ரன்களை கட்டுப்படுத்த முடியாது.

ப்ளேயிங் 11 கணிப்பு
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்


Click it and Unblock the Notifications