Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்வா, சாவா போட்டியில் ஐதராபாத்.. குஜராத் அணியில் யாஷ் தயாள், ஷனகா.. டாஸ் வென்ற மார்க்ரம் பவுலிங்!

அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யும். அதேபோல் ஐதராபாத் அணி இன்றையப் போட்டியில் தோல்வியடைந்தால், ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றப்படும். இதனால் ரசிகர்களிடையே இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Hyderabad won the toss and Aiden Markram chose to bowl against Gujarat in IPL 2023

இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மார்க்ரம் பேசுகையில், எங்கள் திறமைக்கு ஏற்ப இதுவரை விளையாடவில்லை. இந்தப் போட்டியில் அதற்காக முயற்சிப்போம். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினாலும், முடிவில் எதிர்முனையில் தான் நிற்கிறோம். அதனை மாற்ற விரும்புகிறோம். இன்றைய ஆட்டத்தில் கிளென் பிலிப்ஸ்-க்கு பதிலாக மீண்டும் மார்க்கோ யான்சன் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுகையில், நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். இந்த ஆண்டு தொடக்கம் முதலே எங்களின் பாதை அவ்வளவு எளிதாக இருக்காது என்றே கணித்திருந்தோம். அதேபோல் ஒவ்வொரு முறை சோதனையை சந்திக்கும் போது வீரர்கள் முன் வந்தார்கள். இந்தப் போட்டியில் விஜய் சங்கர் காயம் காரணமாக சேர்க்கப்படவில்லை. இதனால் சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஷனகா மற்றும் யாஷ் தயாள் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

ஐதராபாத் அணி விவரம்: அபிஷேக் சர்மா, ராகுல் த்ரிப்பாட்டி, மார்க்ரம், கிளாஸன், சமத், சன்விர், யான்சன். மார்க்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபரூக்கி, நடராஜன்

குஜராத் அணி விவரம்: சுப்மன் கில், விருத்தமான் சாஹா, ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ஷனகா, ராகுல் டிவாட்டியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அஹ்மத்

Story first published: Monday, May 15, 2023, 19:18 [IST]
Other articles published on May 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+